சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வடகிழக்கு டெல்லியில் உள்ள மவுஜ்பூர், கோகுலாபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர்.


அந்த சமயத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா பேரணியின் போது பேசிய பேச்சைக் கேட்டு அமைதி வழியில் போராடி வந்த முஸ்லிம் மக்கள் மீது இந்துத்வா குண்டர்கள் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு போராட்டக்காரர்கள் தரப்பும் பதில் தாக்குதல் நடத்தியது.


இந்த தாக்குதல் வன்முறையாக வெடித்து போராட்டக்களமான வடகிழக்கு டெல்லி பகுதி முழுவதும் போர்க்களமானது. இதனையடுத்து இஸ்லாமியர்களை தேடித் தேடி வன்முறையில் ஈடுபட்டனர் பா.ஜ.க குண்டர்கள். இதனால் இதுவரையில் ஒரு காவலர் உட்பட 13 பேர் உயிரிழந்தும், 100க்கும் மேலானோர் படுகாயமுற்று சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.


நேற்று மாலை வரைத் தொடர்ந்த இந்த வன்முறை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ராணுவப் படையினரை குவித்தப் பிறகு சற்று அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா, டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்தது சென்னையின் ஷாகீன்பாக் எனக் கூறக்கூடிய வண்ணாரப்பேட்டையிலும் நடைபெறலாம். ஆகவே ஆயுதங்கள் வருமுன் அங்கிருந்து கலைந்து செல்வது நல்லது எனும் மிரட்டும் தொணியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்


எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக திட்டித் தீர்த்தும், சிலர் இஸ்லாமியர்களை உஷார் படுத்தியும் வருகின்றனர். முன்னதாக, டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கண்டதும் சுடும் உத்தரவு காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்டது.


உண்மையில் மற்றுமொரு குஜராத் கலவரத்தை உருவாக்கி பா.ஜ.கவே தனது குண்டர்களை ஏவி இஸ்லாமியர்கள் மீது வன்முறையில் ஈடுபட வைத்துள்ளது என்பதை எச்.ராஜாவின் ட்விட்டர் பதிவின் மூலம் தெளிவாகியுள்ளது.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்