விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்

ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமான வரித்துறை, விஜயை மட்டும் குறிவைப்பது ஏன் என மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். photo மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது பேசிய அவர், பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது ஏன் என கேள்வியெழுப்பினார். தமிழ் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் சலுகை அளிப்பதாக சாடினார். ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமான வரித்துறை, மற்றொரு புறம் விஜய் போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் எனவும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.