சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்கு ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த உதவிப்பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.


இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், "ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் பானர்ஜி (26). இவர், சென்னை ஐஐடி தொழிற்நுட்பக் ல் வானூர்தி பொறியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார் இவர், ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.


இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை . சுபம் பானர்ஜி மீது மாணவி அளித்த புகாரின்பேரில் அவரிடம் விசாரித்தபோது அவரின் செல்போனில் கழிவறைக்குள் பெண்கள் செல்லும் முக்கியமான வீடியோக்கள், படங்கள் அழிக்கப்பட்டிருந்தன. ஒருசில படங்கள் மட்டுமே செல்போனில் இருந்தன.


"சம்பவம் நடந்த அன்று அந்த மாணவி, கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது சுவரின் துளை வழியாக ஒருவர், செல்போனில் வீடியோ எடுப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.


சத்தம் போடாமல் அமைதியாக வெளியில் வந்த அந்த மாணவி, யார் வீடியோ எடுக்கிறார் என்பதை ரகசியமாகப் பார்த்துள்ளார். அப்போது ஆண்கள் கழிவறை வழியாக ஐஐடியில் உதவிப் பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலராகப் பணியாற்றும் சுபம் பானர்ஜி, செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.


இதையடுத்து அந்த மாணவி, ஊழியர்களிடமும் மாணவர்களிடமும் விவரத்தைக் கூறி அங்கு அழைத்துவந்துள்ளார். சுபம் பானர்ஜி, தப்பிச் செல்லாமல் இருக்க கழிவறையின் கதவையும் முன்னெச்சரிக்கையாகப் பூட்டி விட்டு சென்றிருந்தார் மாணவி. அதனால் சுபம் பானர்ஜியால் வெளியில் வர முடியவில்லை .


இதையடுத்து ஊழியர்கள், மாணவர்கள் கதவைத் திறந்து சுபம் பானர்ஜியை வெளியில் அழைத்துவந்து விசாரித்தனர். அதன்பிறகுதான் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.


பெண்ணை உள்நோக்கத்துடன் மானபங்கப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் சுபம் பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். கைதான அவர் எம்.டெக் முடித்துள்ளார்" என்கின்றனர்.


சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிகளின் கழிவறையில் பேராசிரியர் ஒருவர் செல்போனில் வீடியோ, படங்களை ரகசியமாக எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத் சுபம் பானர்ஜி மீது ஐஐடி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கெனவே சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா தூக்குப் போட்டு தற்கொலை செய்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் மாணவிகளின் கழிவறையில் வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் வடமாநில உதவிப் பேராசிரியர் சிக்கியுள்ளார்.


இதனால் சந்தேகம் அடைந்த அந்த மாணவி கழிவறைக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் குழாய்களுக்கு இடையே இருந்த ஓட்டையில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது.


இதற்கிடையே ஆண்கள் கழிவறையில் மறைந்துக் கொண்டிருந்த சுபம் பானர்ஜியிடம் விசாரித்த போது, அந்த செல்போன் அவருடையது என்பது தெரியவந்தது. பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்