மியான்மரில் இனப்படுகொலை: உண்மையை உறுதிப்படுத்தியது உலக நீதிமன்றம்

ரொகிங்கியர்கள் குடியுரிமை மியான்மர் அரசு ரத்து செய்தது முதல் உள்நாட்டிலேயே அகதிகளானார்கள். இதன் பின்னர் ரொகிங்கிய இளைஞர்கள் கொஞ்சம் பேர் தீவிரவாதப் பாதைக்குச் சென்றார்கள். ராணுவம் அடிக்கடி ரொகிங்கியர்கள் வாழும் பகுதிகளில் சென்று குடியிருப்புகளில் சூறையாடினர். பாலியல் வன்முறை செய்தனர். இதற்கு பழிவாங்க ரொகிங்கிய இளைஞர்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள்.


ராணவமும் பௌத்த பேரினவாத அமைப்புகளும் கைகோர்த்து 2017ல் அரகன் மாகாணத்தில் புகுந்து மனித வேட்டை நடத்தினார்கள். இரக்கமற்ற வகையில் கொலைகள் செய்தனர். மனித உடலின் உறுப்புகளை உயிரோடு துன்டித்தனர். இந்த கொடுரங்கள் தாங்காமல் ரொகிங்கியர்கள் 10 லட்சம் பேர் (மக்கள் தொகையில் பாதிக்கும் மேல்) எல்லை ஒட்டிய வங்கதேசத்துக்கு ஓடினார்கள்.


மியான்மரில் ராணுவமும் பௌத்த பேரினப் பயங்கரவாதிகளும் சேர்ந்து அரகன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த ரொகிங்கியர்களை இனக் கொலை செய்தார்கள். குழந்தைகள், முதியவர்களை கூட விடாமல் கொன்றார்கள். மியான்மரில் ரொகிங்கிய சமூக மக்களை சன்னம் சன்னமாக கொன்று அரகனை காலி செய்து கையில் எடுக்க வேண்டும் என்பது தான் ராணுவம் மற்றும் பௌத்த பேரின வெறியர்களின் திட்டம்.


மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. தேர்தல் முறையில் உருவான நாடாளுமன்றம் * இருக்கிறது என்றாலும் அரை ஜனநாயகம் ய தான். எல்லா உரிமைகளும் அதிகாரமும் ராணுவ நிர்வாகத்துக்கு தான். நாட்டின் சட்டம் i கலாசாரம் இயற்றும் அதிகாரம், படை பலம், பொருளாதாரம் அனைத்தும் ராணுவத்திடம் தான் உள்ளது. ராணுவத்தின் நடவடிக்கைகளை யாரும் கண்டித்து விட முடியாது. எந்தவொரு ராணுவ அரசுக்கு எதிராகவும் மக்கள் பேசிவிட முடியாது. இந்த அநீதிக்கு நீதி வேண்டி ஆப்ரிக்காவில் உள்ள காம்பியா நாடு உலக நீதிமன்றத்தில் இனக் கொலை வழக்கை மியான்மர் மீது கடந்த மாதம் தொடுத்தது. இனக் கொலைக்கு எதிரான சர்வதேச சட்டங்களை (international convention) மியான்மர் குலைத்து விட்டது


என்ற புகாரையும் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்பித்தது. இந்த வழக்கை எடுத்து விசாரித்த உலக நீதிமன்றம் மியான்மரில் இனக்கொலை நடந்ததை உறுதி செய்துள்ளது. அரகனில் எந்த வன்முறையும் நடக்கவில்லை என்று தொடர்ந்து பொய் கூறி வந்த மியான்மர் ராணுவ அரசின் முகத்தில் அறைந்து விட்டது உலக நீதிமன்றம். மியான்மர் அரசு சார்பில் பங்கேற்ற ஒருவர் உட்பட 17 நீதிபதிகள் இந்த அமர்வில் உள்ளனர். இந்த அமர்வு ரொகிங்கியர்களை பாதுகாக்க எடுத்த குறிப்பிடத் தக்க முடிவு


இது என மனித உரிமை குழுக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இந்த வழக்கு முடிவுற நீண்ட காலம் தேவைப்படலாம் என்றாலும் மியான்மர் ரொகிங்கியர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்ட மக்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ள - நீதிபதிகள் மேலும் ரொகிங்கியர் விசயத்தில் மியான்மர் அரசுக்கு சில பொறுப்புகளை சுமத்தி இருக்கிறார்கள். வழக்கு நடந்து வரும் இந்த இடைக்காலத்தில் மீதமாக குடியிருக்கும் ரொகிங்கியர்களுக்கு பாதுகாப்பு வழங்க ம வேண்டும்.


ராணுவம் செய்த கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை அழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நிறைவேற்றத் தக்க இடைக்கால நடவடிககைகளை உத்தரவாக ஆட இட்டுள்ளது. இது ரொகிங்கியர்களுக்கு கிடைத்த '' வெற்றி என்கிறார் மியான்மரில் ரொகிங்கியர் நலனுக்காக இயங்கும் தன்னார்வ அமைப்பின் (Burmese Rohingya Organization) தலைவர் துன கின் (Tun Khin). இது பிரிட்டனை சேர்ந்த துன அமைப்பு. சர்வதேச நீதிமன்றம் தீர்மானம் வெளியிட்ட போது இவர் நீதிமன்றத்தில் பார்வையாளராக இருந்தார். நீதி கிடைக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். இன்று ஒரு பகுதி நீதி கிடைத்ததாக உணர்கிறோம் என்று கூறியுள்ள


10 லடசத்துக்கும் அதிகமாக ரொகிங்கியர்கள் வங்கதேசத்தில் அகதிகள் முகாம்களில் தங்கி உள்ளனர். போக, இன்னும் 6 லட்சம் ரொகிங்கியர்கள் மியான்மர் அரகனில் வாழ்ந்து வருகிறார்கள். மியான்மர் ராணுவம் அரகன் மாகாணத்தில் நுழைந்த போது கணக்கற்றப் பெண்களை வன்புணர்ந்தனர்உடல் உறுப்புகளை வெட்டினர், கொலை செய்தனர். 7,00,000 லட்சம் பேர் ஊரை விட்டு ஓடி அண்டை நாடான வங்கதேசத்திற்குள் ? நுழைந்தனர். அரகன் பகுதயில் ராணுவம் செய்த அட்டுழியங்களை மியான்மர் அரசு இதுவரையில் மறுத்து வந்தது. ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கே பதிலடி கொடுத்தோம் என்றது மியானமர் அரசுசில மனித உரிமை அமைப்புகள் ரகைன் சூழநிலையை தவறாக சித்தரித்தன என்று மியான்மர் அரசு குற்றம் சாட்டுகிறது.


சர்வதேச நீதிமன்றம் குற்றம் நடந்திருப்பதை உறுதியாக கூறிய பின்னரும் மியான்மர் அரசு இனக் கொலை நடக்கவே இல்லை என்கிறது. மேலும், நீதிபதிகளுக்கு கட்டுப்படுவோம் என்றோ உத்தரவுகளை செயல்படுத்துவோம் என்றோ இடைக்கால நடவடிக்கைகளை செயல்படுத்துவோம் என்றோ எந்த உறுதி மொழியும் கொடுக்கவில்லை. "தகுதியான வழக்கின் மீது சர்வதேச நீதி மன்றம் உண்மையாகவே சரியான முடிவினை கூறியிருப்பது மியானமர் விசயத்தில் மிக முக்கியமாக இருக்கிறது" என்று வெளிவிவகார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


2017ல் நடந்த ரகைன் வன்முறை குறித்து மியான்மர் விசாரணை கமிஷனின் தயாரித்த அறிக்கையின் ஒரு பகுதியை ஜனவரி 29ல் வெளியிட்டதை மியான்மர் அரசு குறிப்பிடுகிறது. ராணுவம் மற்றும் போலீஸ் படையால் போர் குற்றமும், மனித உரிமைகள் மீறலும் நடந்திருக்க வாய்ப்புண்டு என்று ஒப்புக் கொள்ளும் மியான்மர் விசாரணை அறிக்கை, பகை ரகைன் மாகாணத்தில் முஸ்லிம் அல்லது எந்த சமூகத்தையும் பூண்டோடு அழிக்கும் திட்டமோ எண்ணமோ இருந்ததற்கான ஆதாரம் காணப்பட வில்லை என்றும் அந்த - அறிக்கையில் கூறுவதன் மூலம் இனக் கொலை என்ற முதன்மையான குற்றச்சாட்டை மியான்மர் மறுக்கிறது . மனித உரிமைகள் அமைப்புகளும் ரொகிங்கிய மனித உரிமை ஆர்வலர்களும் இந்த என்ற அறிக்கை குற்றத்தை மூடி மறைக்கப் பார்க்கிறது என்று கூறி விட்டனர்.


இது சுதந்திரமான அறிக்கை இல்லை . அரசு நியமனம் செய்த குழுவன அறகசை இது என்கிறார் ரொகிங்கிய விடுதலைக்கான கூட்டமைப்பின (Free Rohingya Coalition) நணை நிறுவனர் நை சான் எல்வின் (Nay San Lwin) சர்வதேச நீதிமன்றத்தில் (The Hague) நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜனவரி 30 அன்று கூறினார். மியான்மர் மக்கள் தலைவர் ஆங் சாங் சூகி (Aung San Suu Kyi) சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த மாதம் வாக்குமூலம் அளித்தபோது கூட மியான்மர் ராணுவத்தை பாதுகாத்தார். ஆனால், உலக நீதிமன்றம் ஜனவரி 30ல் முடிவுகள் அறிவித்த போது ஆங் சாங் சூகி வரவில்லை. பிரிட்டனில் வெளி வரும் பினான்ஸியல் டைம்ஸ் (FinancialTimes) இதழில் கட்டுரை எழுதிய சூகி, மியான்மர் நாட்டு நீதித்துறையே குற்றங்களை விசாரணை செய்ய நேரம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கேட்டுக் கொண்டார்.


ரொகிங்கியர்களுக்கு எதிரான குற்றத்தில் தொடர்புடைய ராணுவத்தினர் ஒருவரையும் தண்டிக்காமல் மியான்மர் அரசு நீண்டகாலம் மௌனமாக இருந்து வருவதை தான் இந்த வியாக்யானம் சுட்டிக் காட்டுகிறது. மியான்மரில் பல ஆண்டுகள் இருந்து வந்த ராணுவ அரசும் பிறகு வந்த சூகி ( Syu Kஹ்வீ) அரசும் ரொகிங்கியர்களின் குடியுரிமையையும் அடிப்படை உரிமைகளையும் படிப்டியாக பறித்துள்ளன. இப்போது மிச்சமிருப்பவர்களில் பலரும் ரகைனில் திறந்த வெளியில் கட்டப்பட்டுள்ள வெளிநாட்டவர்க்கான முகாம்களில் (internment camps) ராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.


ரகைனில் தொடர்ச்சியாக நடந்த வன்முறைகளை தொடர்ந்து ஏறக்குறைய 10 லட்சம்பேர் பக்கத்தில் உள்ள வங்கதேசத்துக்குள் நுழைந்தனர். அங்கு அவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால், வங்கதேச அரசு, அவர்களில் 1 லட்சம் பேரை வெள்ள அபாயம் உள்ள தீவு ஒன்றுக்கு அனுப்பிவைத்து முகாம்களில் அகதிகள் நிரம்பி வழிவதை குறைப்பதற்கு திட்டமிட்டு உள்ளது. ரொகிங்கியர்களில் பெரும்பாலானவர்கள் மியான்மருக்கு திரும்பிச் செல்ல தான் விரும்புகின்றனர் என்று கூறப்பட்டாலும் சமீபத்திய ஆய்வு ஒன்று மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மியான்மருக்குத் திரும்ப விரும்பவில்லை என்கிறது. அரகனில் கிராமங்களில் அவர்கள் காலி செய்து வந்த வீடுகளை பௌத்த மக்கள் ' கைப்பற்றி குடியேறியுள்ளனர்.


அவர்களால் சொந்த மண்ணுக்குத் (repatriation) திரும்ப முடியாது, அரகனில் குடியிருக்கும் ரொகிங்கியர்களுக்கு இன்னும் இனக் கொலை ஆபத்து இருக்கிறது என்று கடந்த வருடம் ஐ.நா. உண்மை அறியும் குழு கூறியது. இப்போது மியானமர் உலக நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்பட மறுத்தால் இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால், மியான்மரின் நட்பு நாடான சீனா இந்த விவகாரம் ஐ.நாவுக்கு வரவிடாமல் நிச்சயம் தடுக்கும்.


உலக நீதிமன்றத்தின் இந்த முடிவானது பொறுப்பை மியான்மர் தலையில் வைத்து கட்டும் மிக முக்கியமானதாக இருக்கிறது என்று சட்ட நிபுனர்கள் கூறுகிறார்கள். இந்த முடிவின் மூலம் சர்வதேச சட்டத்தின் மதிப்பு சர்வதேச அளவில் உயரும், மியான்மர் அரசு மீது உலக நீதிமன்றம் உத்தரவிட்டு சுமத்தியுள்ள பொறுப்புகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக இருக்கிறது என்கிறார் பேராசிரியர் பாயம் அகவன் (Payam Akhavan). இவர் ரொகிங்கியர்களுக்கு வாதாடிய காம்பியா நாட்டு வழக்கறிஞர்கள் குழுவில் இருக்கிறார். மாண்ட்ரீயலில் உள்ள McGill University சட்டப்பல்கலை கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும் பணி செய்கிறார்.


உலக நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் இப்படியொரு முடிவினை எடுத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யம் தான் என்றாலும் அடுத்து எந்தவொரு நாடும் அங்குள்ள சிறுபான்மை மக்கள் மீது ராணுவ ஒடுக்குமுறை செய்ய அஞ்ச வேண்டும். இப்போது கொடுக்கப்பட்ட உலக நீதிமன்ற முடிவு குற்றமிழைத்தவர்களிடமே பொறுப்பை கொடுப்பது. ஆனால், குற்றமிழைத்தவர்கள், இனியும் இழைப்பவர்கள் எவ்வளவு பெரிய பொருப்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிக்க விடக் கூடாது என்ற முடிவை நோக்கியே இது போக வேண்டும். தற்போதுள்ள முதலாளித்துவ உலக ஒழுங்கு அதற்குரிய மரியாதை தருமா? அனுமதிக்குமா? முதலாளித்துவமும், அது உருவாக்கும் சர்வதேச வல்லாதிக்க புவி அரசியலும் இவைபோன்ற இனக்கொலைகளை தடுக்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் அனுமதிக்குமா? என்பது இந்த வழக்கின் போக்கிலும் முடிவிலும் இருந்து வெளிப்படும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்