வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக எஸ்.பி, டி.எஸ்.பி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

தமிழக காவல்துறைக்கு வாக்கி - டாக்கி வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக எஸ்.பி, டி.எஸ்.பிகளுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 2016-ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல்துறையினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.


தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து, 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார்.


டிசம்பரில் ரன்பீர் கபூர் - அலியா பட் திருமணம்? அதில் வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரிய மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.


இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என புகார் எழுந்தது. இதுகுறித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.


இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய காவல்துறையினருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


அப்போது பொறுப்பிலிருந்த எஸ்பி, டிஎஸ்பி வீடுகளிலும், சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டிஎஸ்பி வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது


காவல்துறையினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை உள்ளிட்ட 100 இடங்களில் லஞ்ச ஒழித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்