ஆபத்து வரும் போதெல்லாம் காப்பாற்றிய காப்பான் எல்ஐசி.. அதன் பங்குகளையே மத்திய அரசு விற்பது ஏன்

பட்ஜெட் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.. பெரு முதலாளிகளுக்கான பட்ஜெட்.. நாராயணசாமி! - வீடியோ டெல்லி: அரசுக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுமோ அப்போதெல்லாம் வாரி வழங்கிய அட்சய பாத்திரம் எல்ஐசி. பொதுத்துறை நிறுவனங்கள் ஏதேனும் நஷ்டம் அடைந்தால் அதை வாங்கி அரசை காப்பாற்ற முதல் ஆளாக முன்நின்று வருவதும் எல்ஐசி தான். இப்படி இந்தியாவின் ஜீவனாக திகழும் எல்ஐசியின் பங்குகளை விற்று நிதி திரட்டும் முடிவினை மத்திய அரசு எடுத்தது ஏன் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசுக்கு தேவையான ரூ.2.1லட்சம் கோடி நிதியை திரட்டுவதற்காக பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்போம் என்று அறிவித்தார். எல்.ஐ.சி மற்றும் ஐடிஆர்பி மூலமாக 90 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ள மத்திய அரசு, முன்னதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் ஏர் இந்தியாவின் பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ.2.1லட்சம் கோடி நிதியை திரட்ட முடியும் என அரசு நம்புகிறது. டெல்லியில் மீண்டும் அரியணை ஏறும் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி 54-60 இடங்களை வெல்லும்.. டைம்ஸ் நவ் கணிப்பு


மக்களின் நம்பிக்கை இதில் முக்கியமான விஷயம் என்றால் எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு தான். கோடிக்கணக்கான இந்திய மக்களின் ஜீவனாக விளங்கும் எல்ஐசி தான் இந்தியாவில் 76 சதவீத காப்பீட்டு சந்தையை இன்றும் கைவசம் வைத்துள்ளது. 1956ம் ஆண்டு ஆண்டு காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்கி, எல்.ஐ.சி சட்டத்தின் கீழ் எல்.ஐ.சி நிறுவனத்தை மத்திய அரசு நிறுவியது. மத்திய அரசின் நிறுவனம் என்பதால் நம்முடைய பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக மக்களின் முதல் காப்பீட்டு தேர்வு எல்ஐசியாக உள்ளது.


ஐடிபிஐ வங்கி இந்தியாவின் பொத்துத்துறை நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் மோசமான நிலைக்கு சென்றால் அதை காப்பாற்றும் காப்பானாக எல்ஐசி நிறுவனம் இன்று வரை திகழ்கிறது 2015ல் ஓஎன்ஜிசியின் ( ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்) பங்குகளை பங்குசந்தையில் விற்ற போது அதை வாங்கி காப்பாற்றியது எல்ஐசி தான். இதேபோல் வாராக்கடனில் மூழ்கி ஐடிபிஐ வங்கி திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்ட போது அதை காப்பாற்றியதும் எல்ஐசி தான்.


கடன்கள் எவ்வளவு `இப்படி பிற நிறுவனங்களில் முதலீடு செய்த காரணத்தால் எல்ஐசி நிறுவனத்தின் வருவாய் ஈட்டாத சொத்துக்களின் மதிப்பு ரூ.24,777 கோடியாகவும், நிறுவனத்தின் கடன்கள் 4 லட்சம் கோடிக்கு அதிகமாகவும் 2019ம் ஆண்டு நிலவரப்படி அதிகரித்தது. கடந்த ஆண்டு நிலவரப்படி எல்ஐசியின் சொத்து மதிப்பு 36 லட்சம் கோடியாகும்.


காப்பாற்ற முயன்றதால் எல்ஐசி இப்படி அடுத்த நிறுவனங்களை காப்பாற்ற போய் சிக்கி கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக நஷ்டம் அடைந்திருக்கிறது. குறிப்பாக திவான் ஹவுசிங் ரிலையன்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் பிராமல் கேபிடல் போன்ற நிறுவனங்களின் பங்குகளில் எல்ஐசி முதலீடு செய்து கடும் நஷ்டத்தை சந்தித்து.


ரூ.70 ஆயிரம் கோடி இதுவரை பிற நிறுவனங்களுக்கு பிரச்சனை வரும் போது கடைசி நம்பிக்கையாக திகழ்ந்தது எல்ஐசி. ஆனால் இப்போது முதல் முறை எல்ஐசியின் பங்குகளை விற்றே நிதி திரட்டலாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பது மிக அதிர்ச்சியான விஷயமாக எல்ஐசி ஊழியர்கள் பார்க்கிறார்கள். ஏனெனில் எத்தனை சதவீதம் பங்குளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்போகிறது என்பது குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் நிதிதுறை செயலாளர் ராஜிவ் குமார், "எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதன் மூலமாக மத்திய அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் எதிர்பார்க்கிறது" என்று கூறினார்.


விளக்கம் அளிக்குமா எல்ஐசி தொழிற்சங்கத்தினர் எல்ஐசி பங்குகளை விற்பதை கடுமையாக எதிர்க்கின்றனர். அரசின் பங்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது பாலிசி எடுத்திருக்கும் மக்களின் நம்பிக்கையை கெடுக்கும் என்றும் பொதுத்துறை என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுமக்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ள மக்களுக்கு அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. விளக்கம் அளிப்பார்கள் என்று நம்பலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்