பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, அரிவாளால் கேக் வெட்டிய இளைஞர்

திருவள்ளூர் அருகே, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, அரிவாளால் கேக் வெட்டிய இளைஞர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சினிமாவில் வரும் இந்த காட்சிக்கு கொஞ்சமும் சளைக்காமல், இப்போதெல்லாம் பிறந்தநாள், திருமணம் நாள் உள்ளிட்டவற்றை கொண்டாட, பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவதுதான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.


போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, கடந்தாண்டு பிப்ரவரியில் அரிவாளால் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பினுவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில், பல்வேறு இடங்களிலும் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி போலீசாரிடம் சிக்கும் வீடியோக்கள் அடுத்தது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.


பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்தாலும், ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்டவற்றில் பதிவிடுவதற்காகவே பலர் இதுபோன்ற அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு கைதான சம்பவங்களும் அரங்கேறின.


அந்த வகையில், கடந்த மாதம், திருமண விழாவில், உடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கிய, பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய மணமகன் புவனேஷை, மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்றபோது போலீசார் கைது செய்தனர்.


திருமணம் நடந்து ஒரு நாள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், மாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவழியாக மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில், திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அஜித்குமார் என்ற இளைஞரின் பிறந்தநாளை கொண்டாட, கிராம சாலையின் நடுவே, பட்டாக் கத்தியால் கேக் வெட்டி, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக, அஜித்குமார், கலைவாணன், விஜய், உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித்குமார் மற்றும் கலைவாணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.


பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவது, கெளரவமான நிகழ்வா? எப்படி இதனை இளைஞர்கள் தெரிந்தே செய்கிறார்கள் என அடுக்கடுக்கான கேள்விகள் நம் கண்முன்னே இருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள், தங்களை பற்றி மக்களிடையே தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டாலே, பல சிக்கல்களை தவிர்க்க முடியும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்