டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று.

ஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 70 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


சீனாவிற்கு சென்று வந்த டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரை தனது நாட்டுக்குள் ஜப்பான் முன்னெச்சரிக்கையாக அனுமதிக்கவில்லை.


யோகோஹமா துறைமுக பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டு, அதிலிருக்கும் 3 ஆயிரத்து 700 பேரும் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.


தற்போது அவர்களில் மேலும் 70 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் அக்கப்பலில் இருப்போரில் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 355ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே நேரிட்ட மிகப்பெரிய பாதிப்பாக இது அறியப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)