7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம்


7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு முன் வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், ஆளுநருக்கு நீதிமன்றத்தால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் கூறினர்.


7 பேர் விடுதலை குறித்த கோப்பு ஆளுநர் முன்பு ஏன் இத்தனை மாதம் நிலுவையில் உள்ளது என கேள்வி எழுப்பி நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்