மணல் கடத்தல்... மாத மாமூல் பல லட்சம்....

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் மேல்பட்டி பகுதியில் திருட்டு மணல் கடத்தல் படுஜோராக நடக்கிறது. தினசரி நள்ளிரவு இரண்டு மணி தொடங்கி விடியற்காலை ஆறு மணி வரை கார்கூர் கார்த்தி, மேல்பட்டி ரமேஷ், வைத்ணாங்குப்பம் பாபு, மாயா, ரமேஷ் இவர்களில் தலா ஒவ்வொரு நபருக்கும் மூன்று டிராக்டர்கள் என மொத்தமாக 12 டிராக்டர்கள்.


இது தவிர காக்காதோப்பு பகுதியில் இருந்து மூன்று டிப்பர் லாரிகள், கொத்தகுப்பம், சின்ன தோட்டாளம் என தலா இரண்டு டிப்பர் லாரிகள், மேல்பட்டு மாட்டு வண்டிகள் தண்டபாணி, சிவா, பாபு, மேல்வைத்ணாங்குப்பம் அ.தி.மு.க. பாபு, கார்கூர் கேசவன், தாகூர், ரமேஷ் இப்படியாக பத்துக்கும் மேற்பட்டவர்களின் மாட்டு வண்டிகள் என மேற்குறிப்பிட்ட டிராக்டர்கள், டிப்பர் லாரிகள், மாட்டுவண்டிகள் தினசரி பச்சகுப்பம், மேல் வைத்ணாங்குப்பம் பாலாற்றில் தினசரி மணல் கொள்ளை. கொள்ளையோ கொள்ளை என மணல் கொள்ளை நடந்து வருகிறது.


இந்த மணல் கொள்ளைக்கு காவல் துறைக்கு மாமூல் பணம் டிராக்டர் ஒன்றுக்கு 50 ஆயிரம், டிப்பர் லாரி ஒன்றுக்கு 50 ஆயிரம், மாட்டு வண்டிக்கு வார மாமூல் 2 ஆயிரம் என 12 டிராக்டர்களுக்கு ரூ.6- ஆயிரம், டிப்பர் லாரிக்கு ரூ.30 ஆயிரம், மாட்டு வண்டிக்கு மாதம் 12 வண்டிக்கு ஒரு லட்சத்து இருபது ஆயிரம்.


இப்படி என மாத மாமூல் இரண்டு லட்சம் ஆண்டு மாமூல் 30 லட்சம் மணல் கொள்ளை மாமூலம் பணம் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர், மேல்பட்டி உதவி காவல் ஆய்வாளர், பேரணாம்பட்டு வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் இப்படி திருட்டு மணலை கட்டுப்படுத்த கூடிய துறை சார்ந் கட்டுப்படுத்த கூடிய துறை சார்ந்த நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்ப்பதுடன் மாத மாமூலில் மதி மயங்கி மௌனிக்கிறது.


இவை எல்லாவற்றுக்கும் மேலாக மேல்பட்டி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. என்ற போர்வையில் மேற்குறிப்பிட்ட மாட்டு வண்டி, டிராக்டர், டிப்பர் லாரி உரிமையாளர்களிடம் வார மாமூல் வசூலித்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.


 தினசரி சின்ன தோட்டாளம், கொத்தமாரி குப்பம், எம்.வி.குப்பம், பத்துகுப்பம், 6 எம்.வி.குப்பம், பத்துகுப்பம், பேரணாம்பட்டு பகுதிக்கு தினசரி மணல் கொள்ளை நடப்பதை மாவட்ட கனிமவள கொள்ளை தடுப்பு பிரிவு கட்டுபடுத்துவதுடன் இது தவிர்த்து காட்டன், லாட்டரி, கிளப் நடத்தி பல லட்சங்களை மாமூலாக பேரணாம்பட்டு காவல் துறைக்கு புகார்கள் குவிந்தப்படி வருகிறது.


புகார்கள் குவிந்தப்படி வருகிறது. எனவே மாநில கனிம வள குற்றப்பிரிவு ஐ.ஜி இதன் மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என பகுதி, தொகுதி மக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்