சத்துணவில் வழங்கப்படும் முட்டைகளில் துர்நாற்றம் வீசும் அவலம்

எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தின் கீழ் அங்கன் வாடி மையங்களில் பதிவு செய்துள்ள 1 வயது முதல் வயதுடைய குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டையும்அங்கன் வாடி மையங்களுக்கு வருகை தரும் 2 வயது முதல் 5 வரையுள்ள குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகளும் மற்றும் பள்ளி செல்லும் 1ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வாரம் 5 முட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது.


சராசரியாக 53.91 லட்சம் பயனாளிகள் இத்திட்டத்தின் பயன்பெற்று வருகின்றனர் என ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.


கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்துணவு முட்டை வழங்கும் நிறுவனமான கிறிஷ்டி நிறுவனத்திடம் முட்டைகள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டது. பின்னர் சமூக நலத்துறையின் மூலம் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது பின் அந்த விசயம் முடிவுக்கு வந்தது.


தற்போது புதிய முறைகேடுகள் அறங்கேறும் விதமாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் வருகிறது.


வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதிகள் 104 அங்கன் வாடிகள் உள்ளது. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.


இங்கு சத்துணவிற்காக வழங்கப்படும் முட்டையில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதனால் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி போன்றவைகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


காட்பாடி வட்டத்தில் மட்டும் அங்கன்வாடி மையங்கள் உள்பட 55 தொடக்கப்பள்ளிகள் 22 நடுநிலைப்பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள்களில் இதே போன்ற துர்நாற்றம் வீசுவதாகவும் ஒரு வேளை கெட்டு போன முட்டைகளை அனுப்பிவைக்கப்படுகிறதா? எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்றனர்.


எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம், வறுமை கோர்ட்டிற்கு கீழ் வாழும் பிள்ளைகளுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது ஆனால் துர்நாற்றம் வீசும் கெட்டுபோன முட்டைகளை வழங்கி வருவதனை பார்க்கும் போது இதிலும் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா குழந்தைகளின் பெற்றோர்கள் ' சந்தேகிக்கின்றனர்.


குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையில் துர்நாற்றம் வீசவதனை பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் எங்களுக்கு வழங்குவதை பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம். அதில் துர்நாற்றம் வீசுவது உண்மைதான் நாங்கள் என்ன செய்ய முடியும் என சிம்பிளா முடித்துக் கொள்கின்றனர்.


அருகில் உள்ள கடைகளில் வாங்கி சமைக்கும் முட்டையில் வராத துர்நாற்றம் எப்படி பள்ளிகளில் வழங்கப்படும் முட்டையில் வருகிறது என்ற மர்மம் தான் நமக்கு புரியவில்லை .


முட்டையின் மூலம் புட்பாய்சன் ஏற்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சமூக நலத்துறை தலையிட்டு சம்பந்தப்பட்ட துறையில் முறையாக ஆய்வு நடத்தி தரமான முட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்