63 இடத்தில் நினைத்து பார்க்காத ஷாக்.. சோனியா அதிர்ச்சி.


ஷீலா தீட்சித் இருந்தால் இப்படி ஆகி இருக்குமா? 63 இடத்தில் நினைத்து பார்க்காத ஷாக்.. சோனியா அதிர்ச்சி.


 டெல்லி தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி
டெல்லி: டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 70 இடங்களில் மொத்தம் 63 தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது.


டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றிபெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மாபெரும் பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லியின் முதல்வராகிறார்.


டெல்லியில் பாஜக 7 இடங்களில் வென்றுள்ளது.பாஜக இதன் மூலம் டெல்லியில் மீண்டும் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது.காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் கிஷோர் கூறிய "அந்த" அட்வைஸ்.. ஆம் ஆத்மியின் மாஸ் வெற்றிக்கு இதுவும் காரணம்!


டெல்லி எப்படி ஒரு காலத்தில் டெல்லியில் வரிசையாக மூன்று முறை ஆட்சி அமைத்த கட்சிதான் காங்கிரஸ். அது டெல்லி காங்கிரஸ் கட்சியின் பொற்காலம் என்று கூறலாம். முக்கியமாக ஷீலா தீட்ஷித் டெல்லி காங்கிரசை கட்டுப்பாட்டில் வைத்து இருந்த வரை அங்கு காங்கிரஸ் ராஜ்ஜியம்தான் இருந்தது. ஆனால் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு பின்தான் மொத்தமாக டெல்லி, காங்கிரஸ் கையை விட்டு போனது. அப்போது நடந்த லோக்பால் போராட்டமும் இதற்கு வழி வகுத்தது.


சூழல் எப்படி இந்த சூழலை பயன்படுத்திதான் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மியை தொடங்கினார். காங்கிரசை எதிர்த்து நின்று அவர், முதல் முறை காங்கிரஸ் உடனே கூட்டணி வைக்கும் நிலை வந்தது.


பின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, தனியாக நின்றே தேர்தலை ஆம் ஆத்மி சந்தித்து 67 இடங்களுடன் ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு தோன்றிய அஸ்தமனம் தற்போது டெல்லியில் பெரிய அளவில் மாறி இருக்கிறது.


லோக்சபா தேர்தல் அதன்பின் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. டெல்லியிலும் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை தழுவியது.


பின் 2019 லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வளவு கேட்டும் கூட, காங்கிரஸ் அவர்கள் உடன் கூட்டணி வைக்கவில்லை.


ஷீலா தீட்சித், அரவிந்த் கெஜ்ரிவால் இடையே இருந்த ஈகோ பிரச்சனையும் இதற்கு பெரிய காரணமாகும். ஷீலா தீட்சித் மறைவிற்கு பின், மொத்தமாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் முகமற்று போனது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும் அந்த கட்சி பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை.


ஆம் ஆத்மி - பாஜக இடையிலான மோதல் என்ற அளவில் தான் இந்த தேர்தல் இருந்தது. அதற்கு ஏற்றபடி காங்கிரஸ் கட்சி டெல்லியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.



இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 53.68% வாக்குகள் பெற்றுள்ளது. பாஜக 38.45% வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 4.84% வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் 2015ல் 51% இருந்தது.


அது தற்போது 4% ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் 62 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. அவ்வளவு மோசமாக அந்த அக்கட்சி செயல்பட்டுள்ளது .


காங்கிரஸ் கட்சியின் கீர்த்தி ஆசாத் போன்ற மிக முக்கியமான மூத்த தலைவர்கள் கூட இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது.


10 இடங்களில் நோட்டாவை விட அக்கட்சி குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. 17 இடங்களில் சுயேட்சைகளை விட குறைவான வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இதுதான் அந்த கட்சியை வருத்தம் கொள்ள செய்த செய்தி.


இடைக்கால தலைவர்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை இந்த செய்தி பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவருக்கு இதனால் நெருக்கடி அதிகம் ஆகியுள்ளது.


டெல்லி காங்கிரஸ் கட்சிக்குள் இதனால் நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஷீலா தீட்சித் இருந்திருந்தால், டெல்லி காங்கிரஸ் இவ்வளவு மோசமாக தோற்று இருக்காது என்று காங்கிரஸ் தொண்டர்கள் புலம்பி வருகிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்