பத்திரிகையாளர்களுக்கு மும்பையில் நடந்த பயங்கரம்... 6 பேர் கைது.. February 23, 2020 • M.Divan Mydeen மும்பை மாநகரத்திலுள்ள பகத் சிங் நகரில் மூடாமல் கிடந்த ஒரு சாக்கடையில் 19 வயது இளம்பெண் விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பான செய்தி சேகரிக்க பெண்கள் உள்ளிட்ட சில பத்திரிகையாளர்கள் அங்கு சென்றனர். அவர்கள் தங்களது வாகனத்தை ஒரு பூங்காவிற்கு அருகில் நிறுத்திவிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று செய்திகளை சேகரித்தனர். பின்னர் மீண்டும் வண்டியை எடுக்க சென்ற அவர்களை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின்னர் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த அக்கும்பல் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சஞ்சய் ராஜ், இளையராஜா, ராஜேந்திர லட்சுமண், ராகேஷ் ராம்பால், ஜான் அஜித் பாபுதுரை உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.