தீவிர வசூல் வேட்டையில் திருவண்ணாமலை அய்யம்பிள்ளை

ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணா மலையார் ஆலயத்தில் தினசரி பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பௌர்ணமி அன்று மட்டும் இவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும். இப்படி குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் காணிக்கையாக லட்சக்கணக்கில் செலுத்தும் பணம், உண்டியலுக்கு வருவதற்கு முன்பே புரோக்கர்கள் மற்றும் ஆலய கண்கானிப்பளரின் பாககெட்டுகளை நிரப்புவதாகவும்,இதனால் அற நிலையத்துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் சமீப காலமாக எழுந்து வருகின்றன.


இது பற்றிய விசாரனையில் நாம் இறங்கினோம். தற்போது, அண்ணாமலையார் கோவில் கண்காணிப்பாளராக இருப்பவர் அய்யம்பிள்ளை. வேலூரில் பணியாற்றிய இவர், தற்போது பதவி உயர்வு பெற்று, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சிலருக்கு 'படியளந்து' கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவண்ணாமலை கோவிலில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். இவர் இங்கு பணியில் சேர்ந்த்து முதல், அண்ணாமலை உண்ணாமலையம்மன் சன்னதி மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை மூலஸ்தானம் பூட்டு போடப்பட்டு, இவருக்கு வேண்டப்பட்டவர்கள் வந்தால் மட்டும் எந்த நேரமும் தரிசனத்திற்கு புரோக்கர்கள் மூலம் அனுமதி அளிக்கப்படுவதாக குமுறுகிறார்கள் பக்தர்கள்.


இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசும் போது, "சமீபத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி ஆகியோர் தலைமையில் நடந்த தீபத்திருவிழாவின் போது, சுமார் இருபது லட்சம் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இது முடிந்த சில நாட்கள் கழித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அண்ணாமலையார் கோவில் சுவாமி தரிசனத்திற்கு மாலை 6.30 மணிக்கு வரும் போது பூட்டு போடப்பட்டு இருந்தது.


காவல் துறையினர் ஆலய நிர்வாகத்திடம் சாவி கேட்டத்திற்கு ஆலய நிர்வாகம், எஸ்.பி.யாக இருந்தால் என்ன, யாராக இருந்தால் என்ன?' எனக் கூறி திருப்பியனுப்பவும், பக்தர்களோடு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விட்டார் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி.


மறுநாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் அண்ணாமலையார் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் திரும்ப அழைக்கப்பட்டனர் . இதனால் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன் பிறகு, ஆலய நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர் பேச்சு வார்த்தைநடத்திய பின்பே ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் காவல்துறையினர் பாதுகாப்பில் அமர்த்தப் பட்டனர். இந்த பிரச்சனைக்குக் காரன மே இந்த அய்யம்பிள் ளைதான். இவரால், ஆலயத்தில் லஞ்சம் மற்றும் புரோக்கர்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது.


தவிர, அண்ணா மலையார் ஆலயத்தில் பணியாட்கள் பற்றாக்குறையினால் தினக்கூலி ஊழியர்கள் சிலர் செல்ஃபோன் மூலம் டீலிங்க் பேசி, அதிக பணம் கொடுப்பவர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர்.


ஆலய அரசு ஊழியர்கள் வெளி வேலைக்கு அனுப்பப் படு கிறார்கள் - இதனால் பக்தர்கள் சீரான முறையில் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை . துப்புறவு பணியாளர்கள் கூட அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் லஞ்சம் கேட்கிறார்கள்.


பக்தர்களிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த கும்பல்கள் சுகாதாரம் பற்றி சிறிதும் சிந்திக்காத்தால், கோவிலின் மதில் சுவரை சுற்றி ஆட்டோ நிறுத்துமிடமாகவும் , சிறுநீர் கழிக்கும் இடமாக மாறிவிட்டது. இதை இணை ஆணையர் ஞான சேகரும் கூட கண்டு கொள்வதில்லை.


கோவிலின் முன் பூ விற்பவர்கள் கூட தினசரி வரும் பக்தர்களிடம் கன்னியமான முறையில் பேசாமல் மிரட்டுவது போன்ற இழிவான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இதனால், வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும் மிகுந்த சங்கடம் ஏற்படுகிறது.


எனவே, உடனடியாக இந்து சமய அற நிலய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரடியாக தலையிட்டு ஆலய கண்காணிப்பாளர் அய்யம்பிள்ளை மீது நடவடிக்கை எடுத்து தரிசன விதிமுறைகளை மாற்றி அண்ணாமலையார் திருக்கோவிலின் பெருமைகளை காக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர் நம்மிடம்.


இது பற்றிய விளக்கம் கேட்பதற்காக என பக்தர்கள் ஆலய கண்கானிப்பாளர் அய்யம்பிள்ளையைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தார் அய்யம்பிள்ளை.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்