ஊடகவியலாளரின் நேரடி அனுபவம் அதிர்ச் சியை அளிக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா

அகமதாபாத்தில் மோடி - டொனால்ட் டிரம்ப் இருவரையுமே ஊடகத்தினர் சுற்றிவந்த போது, டில்லியில், கலவரபூமியில் இருந்த ஒரு ஊடகவியலாளரின் நேரடி அனுபவம் அதிர்ச் சியை அளிக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்புகிறது. அந்த ஊடகவிய லாளரின் அவலக் குரல் இதோ!


"மதியம் 12.30 மணியளவில் நான் முஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்தேன். நான் இறங்கி சிறிது தூரம் நடந்துசெல்வதற்குள், என்னைக் குறுக்கிட்ட இந்து சேனா உறுப்பினர் ஒருவர், "குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களது பணியை எளிதாக்கும்" என்றார்.


புகைப்பட கேமராக்களுடன் சென்ற என்னைப் பார்த்தவுடன் அவருக்கு நான் ஒரு ஊடகவியலாளன் என்பது புரிந்திருக்கும். அதன் காரணமாகவே அவர் அந்த குங்குமத்தை நீட்டுகிறார் என்பதை உணர்ந்துகொண்டேன்.


"நீங்க ஒரு இந்துதானே? குங்குமம் வச்சுக்கிறதுல என்ன பிரச்சனை" என்றார் - அந்த இந்து சேனா உறுப்பினர்.சுமார் 15 நிமிடங்களில், இரு தரப்பினர்கள், கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.


மோடி மோடி என்ற பெருத்த கூச்சல்களுக்கு நடுவே, கரும்புகை சூழ்ந்த மண்டலமாக அப்பகுதி மாறிக் கொண்டிருந்தது. பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு கட்டடத்தைப் ஒளிப்படம் எடுப்பதற்காக, நான் விரைந்தபோது, அங்கிருந்த சிவன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த சிலர் என்னைத் தடுத்தார்கள்.


பிரபல பத்திரிகையின் ஒளிப்படக்காரன் என்று சொன்னபோதும், என்னை அனுமதிக்காத அவர்கள் "நீங்களும் இந்துதானே? ஏன் அங்க போறீங்க? இந்துக்கள் இப்ப முழிச்சுக்கிட்டாங்க" என்றார்கள்.


நான் அங்கிருந்து பின்வாங்கி, வேறு வழியாக, எரிந்து கொண்டிருந்த கட்டடத்தின் அருகே சென்று ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். உடனே, கைகளில் இரும்புத் தடிகள் / மூங்கில் பிரம்புகளுடன் நின்று கொண்டிருந்த சிலர் சூழ்ந்து கொண்டனர். என்னுடைய கேமராவைப் பறிக்க முயன்றனர்.


அங்கு என்னுடன் இருந்த, பத்திரிக்கையாளர் சாக்க்ஷி, என்னைக் காப்பாற்றினார். அப்போதைக்கு அங்கிருந்து நகர்ந்து சென்றாலும், நான் செல்லுமிடங்களுக்கெல்லாம் அவர்கள் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் என்பது மிகவும் என்னை அச்சுறுத்தியது.


சட்டென்று என்னை நிறுத்திய, அக்கும்பலை சேர்ந்த இளைஞன் ஒருவன் " ரொம்ப சாமர்த்தியமா நடக்குறன்னு நெனப்பா உனக்கு? நீ இந்துவா, முஸ்லீமா?" என்றான்.


அது மட்டுமல்லாமல், நான் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக என்னுடைய முழுக்கால் சட்டையைக் கழற்றி சோதனையிடப் போவதாக கூறினார்கள். நிஜமாகவே பயந்துவிட்டேன்.


இரு கைகளால் அவர்களை கும்பிட்டு வணங்கி, "நான் ஒரு சாதாரண ஒளிப்படக்காரன் மட்டுமே" என்று மன்றாடினேன். அப்போதும், என்னைக் கடுமையாக மிரட்டிய பின்னரே அங்கிருந்து அனுப்பினார்கள்.


என்னுடைய அலுவலக வாகனம், நான் இருந்த பகுதியில் இருந்து மிகத் தொலைவில் இருந்ததால், நடந்தே சென்று ஒரு ஆட்டோவைப் பிடித்து விமான நிலையம் செல்லத் தொடங்கினேன். சில நொடிகளில், அந்த ஆட்டோவின் பெயர் என் கண்ணில் பட்டதும் அதிர்வடைந்தேன்.


அந்தப் பெயர் காரணமாக, நான் மீண்டும் சித்திரவதைக்கு ஆளாக்கப்படலாம் என்று யோசித்து முடிப்பதற்குள்ளாக, நான்கு பேர் கொண்ட கும்பல் , ஆட்டோவை நிறுத்தி என்னையும், ஓட்டுநரையும் சட்டைக் காலரைப் பிடித்து வெளியே இழுத்துப் போட்டது.


"நான் ஒரு பத்திரிகையாளன்" என்று அந்தக் கும்பலிடம் மன்றாடினேன். அந்த ஓட்டுநரும் அப்பாவி என்றான். நாங்கள் இருவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தோம்.


"என்னுடைய மதம் குறித்து யாரும் இப்படியொரு கொடூரமான முறையில்என்னிடம் விசாரித்ததில்லை" என்றார் ஓட்டுநர்."


அநிந்த்யா சட்டோபாத்யாய் ஒளிப்படக்காரர் 'டைம்ஸ் ஆப் இந்தியா'


நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியில் இந்து அல்லாத மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொன்னால், உதட்டைப் பிதுக்கி 'இதெல்லாம் உண்மையில்லை' என்று பேசும் மேதாவிகள் இது போன்ற நிகழ்ச்சி களுக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்?


சக மனிதனைப் பார்க்கும் போதே மதக் கண்ணோட்டம் என்றால் இது நாடா? சுடு காடா? ஜனநாயகம் இருக்கிறதா - மத நாயகம் தலை விரித்து ஆடுகிறதா? என்ற கேள்வி எழத் தானே செய்யும்!


"மதச் சார்பின்மைக் கொள்கையை ஏற்று ஆட்சி செய்வோம்" என்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு அமைச்சரவை நாற்காலியில் அமர்ந்தவர்கள் அதற்கு நேர் எதிராகப் பயணிப்பது - சட்டப்படி அப்பதவியிலிருந்து அவர்களை வெளியே தள்ளுவதற்குப் போதுமானதாகும்.*


*நன்றி : "விடுதலை" நாளேடு*


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்