மருத்துவர்கள் அலட்சியம் கர்ப்பிணி சாலையோரம் குழந்தையை பெற்றெடுத்த அவலம்..!

உ.பி மாநிலத்தில் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள்.. கர்ப்பிணி சாலையோரம் குழந்தையை பெற்றெடுத்த அவலம்..!


மருத்துவமனைக்குள் செவிலியர்கள் அனுமதிக்காததால் கர்ப்பிணிக்கு சாலையிலேயே பிரசவம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் பரைச் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்துக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.


ஆனால் அப்பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகவே அவர் துடித்துள்ளார். நிலமையை உணர்ந்த கர்ப்பிணியின் உறவினர்கள், சாலையோரத்தில் துணியால் மறைத்து அவரது உறவினர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.


அப்போது அவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளர், குறிப்பிட்ட நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்