ஓட்டுநர்களால் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஆபத்து" - சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கண்டித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற நிரந்தர தொழிலாளர்களை வேறு பணிக்கு அமர்த்தி விட்டு அனுபவமில்லாத ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு ரயில்கள் இயக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


அப்போது செய்தியாளரிடம் பேசிய சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்தரராஜன், “இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் தனக்கான தனிச்சட்டம் வகுத்துள்ளது. அந்தச் சட்டத்தை அவர்களுக்கு தகுந்தபடி எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்வதால் ஊழியர்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.


தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும். நிர்வாக மேலாண்மை இயக்குனராக பன்வாரிலால் பங்கை ஆறு ஆண்டுகளாக பணியில் நீடிப்பதால் மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பினார். பார்க்கிங் கண்ட்ரோல் ரூம் உட்பட பல ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுகிறது" என்றும் குற்றம் சாட்டினார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு