வைட்டமின்கள் அதிகம் நிறைந்த பழங்களில் ஒன்று ஆரஞ்சு பழம்.

இந்த பழம் உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாலும் கிடைக்கிறது.


ஆரஞ்சில் உள்ள Vitamin C ஊட்டச்சத்து செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.


Vitamin C அதிகம் நிறைந்திருப்பதால், ஆரஞ்சு பழங்களை அதிகம் எடுத்து கொள்வதால் சருமம் பொலிவுடன் இருக்கும் என்பது மட்டுமே பலருக்கும் தெரியும்.


ஆனால் ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.


இந்த பழத்தில் கலோரிகள் குறைவு என்பதால், உடல் பருமனால் அவதிப்படுவோர் எடை குறைப்பிற்காக இதனை எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி-யானது, முடி வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் கொலஜன் புரத உற்பத்திக்கு உதவுகிறது. எனவே கூந்தல் ஆரோக்கியமாக இருக்க ஆரஞ்சு பழங்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.


மனித இனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்க கூடிய புற்றுநோயை எதிர்த்து போராடும் டி –லிமோனின் சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய்களிலிருந்து தற்காத்து கொள்ளலாம்.


இந்த பழங்களில் இருக்கும் Vitamin K, Vitamin C, பொட்டாசியம் உள்ளிட்டவை சருமத்தை பாதுகாப்பது போல கண்களையும் பாதுகாக்கின்றன. தினசரி ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் கண்பார்வை குறைபாடு காணாமல் போகும். பார்வை திறன் மேம்படும்.


வயது ஏற ஏற உடலின் மற்ற பாகங்களை போல தோலும் சுருக்கங்கள் ஏற்பட்டு பாதிப்பை சந்திக்கிறது. இதிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது ஆரஞ்சு பழங்கள். இதில் அடங்கி இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பீட்டா கரோட்டீன், சூரியக் கதிர்களால் சருமத்தில் உள்ள செல்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.


ஆரஞ்சுப் பழத்தில் நிரம்பியுள்ள ‘ஃபோலேட்’, ‘ஃபோலிக் உள்ளிட்ட அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள் ஆரஞ்சு பழங்களை தினசரி சாப்பிட்டு வந்தால் அது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு நரம்பு குறைபாடுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும்.


ஆரஞ்சுப் பழம் நார்ச்சத்துமிக்கது என்பதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும். அதே போல வைரஸ் தொற்று வராமல் பாதுகாக்கும் பாலிஃபீனால் ஆரஞ்சு பழத்தில் உள்ளது.உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றன ஆரஞ்சுப் பழங்கள்.


வாய், பற்கள் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளன ஆரஞ்சு பழங்கள். ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.


இந்த பழங்களில் உள்ள ஃபிளேவனாய்ட், ஹெஸ்பெரிடின் ஆகியவை கொழுப்புச் சத்தைக் குறைத்து, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.


ஆஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து அடங்கி இருப்பதால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும் வேலையையும் செய்கின்றன ஆரஞ்சுப் பழங்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு