சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்க சென்று கொண்டிருந்த ஸ்டாலின் சாலையில் விபத்தில் சிக்கியிருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


திமுக தலைவர் ஸ்டாலின் தமது கொளத்தூர் தொகுதியில் ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டார். அயனாவரம் திக்காகுளம் சலவைக் கூடத்தில் ஓய்வெடுக்கும் அறைகளுடன் கூடிய நவீன சலவைக் கூடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.


அங்கிருந்து மாதவரம் நெடுஞ்சாலையில் ஸ்டாலின் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம், சாலையில் நடந்து கொண்டிருந்தவர் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கிய நபரை மீட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


பின்னர் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.