கஞ்சா, மதுபாட்டில்கள் பறிமுதல் ... 250 பேரை சுற்றிவளைத்த போலீசார்...!

கொடைக்கானலில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில், போதை மருந்து பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து 250-க்கும் மேற்பட்டோரை போலீஸார் சுற்றிவளைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குண்டுப்பட்டி மலைக்கிராமம்.


இங்கு இணையதளம் மூலம் தனியார் தோட்டம் ஒன்றில் ஒன்றிணைந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் இரவு விருந்தில் பங்கேற்றிருந்தனர். இந்த கேளிக்கை நிகழ்ச்சியில், போதை மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.


இதுதொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, மதுரை சிறப்பு போதை மருந்து தடுப்பு போலீஸார், இரவு விருந்தில் பங்கேற்ற 250-க்கும் மேற்பட்டோரையும் சுற்றிவளைத்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்தது.


அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் மதுபாட்டிகல்கள் இருப்பது தெரியவந்ததால் அவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. கேளிக்கை விருந்திற்கு ஏற்பாடு செய்ததாக நிலத்தின் உரிமையாளர் கற்பகமணி, நிதிஷ்குமார், தருண் ஆகிய மூவரை கைது செய்த போலீஸார், யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.


பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தற்போது நண்பர்கள் வட்டாரங்கள் பெருகி வருவதும், அவ்வப்போது நேரில் சந்தித்து தங்கள் நட்பை விரிவுபடுத்தி வருவதும் அறிந்ததே. இந்நிலையில் மது விருந்துக்காக வந்தவர்கள் எதற்காக ஒன்று கூடினார்கள். என்ன பேசினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்