இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்

சென்னை பூந்தமல்லி இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் செட் அமைக்கும் பணியின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையிலுள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இன்று, இந்தியன் 2 படத்திற்கான செட் வேலையில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு