2,000 ரூபாய் நோட்டுகள் வேண்டாம்!' - சர்ச்சையான இந்தியன் வங்கி அறிவிப்பு

வங்கி டெபாசிட் மெஷின்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் 2,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் சுழற்சிக்கு விடவேண்டாம்.


அவற்றுக்குப் பதிலாக அதைவிட குறைந்த 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளால் மட்டும் நிரப்பினால் போதும்'.


2,000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து உடனடியாக நீக்கும்படி, இந்தியன் வங்கியின் அனைத்துக் கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


அந்த சுற்றறிக்கையில், `2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.


நமது ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பெறும் வாடிக்கையாளர்கள், வேறெங்கும் சில்லறை கிடைக்காததால், சில்லறை மாற்றுவதற்காக நமது வங்கிக்கிளைகளுக்கே வருகிறார்கள்.


இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக, இனி வங்கிகளில் உள்ள ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டாம்' என்று கூறப்பட்டுள்ளது.


அதேபோல, வங்கி டெபாசிட் மெஷின்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் 2,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் சுழற்சிக்கு விடவேண்டாம். அவற்றுக்குப் பதிலாக, அதைவிட குறைந்த 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளால் மட்டும் நிரப்பினால் போதும்.


இந்தியன் வங்கியின் வெளிப்புற ஏடிஎம் மெஷின்களில் பணத்தைச் செலுத்தும் ஏஜென்ஸிகளும், இனிமேல் 2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்-களில் வைக்க வேண்டாம். இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்தியன்வங்கியின் டெபாசிட் மெஷினைப் பொறுத்தவரை, 2,000 ரூபாய் நோட்டுகளைச் செலுத்தினால், அது எடுத்துக்கொள்ளும்.


அதிலிருந்து பணத்தை எடுக்கும்போது, 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம்வரை மட்டுமே பெறலாம். ஆனால், வரும் மார்ச் 1 முதல் டெபாசிட் மெஷின்களில் 2,000 ரூபாய் நோட்டுகளைச் செலுத்த மட்டுமே முடியும். திரும்பப் பெற முடியாது.


இந்த சுற்றறிக்கையில், 2,000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்குவதற்கு சொல்லப்படும் காரணம் நம்பும்படியாக இல்லை.


இதற்கு உண்மையான காரணம், 2,000 ரூபாய் நோட்டுகளை முழுமையாக புழக்கத்திலிருந்து நீக்கிவிட்டு, அனைவரையும் ஆன்லைன் பணப்பரிமாற்றத்துக்கு மாற்றுவதற்காக இருக்கலாம். அதேபோல, மீண்டும் 2,000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்' என்கிறார்கள்.


இதுதொடர்பாக, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம். ``இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைப்பதில்லை. அதுதான் உண்மை. 2016 நவம்பரில் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை கேலிக்கூத்துதான்.


அதனால், கறுப்புப் பணமும் ஒழியவில்லை; ஊழல், தீவிரவாதிகளுக்கான பண உதவியும் நிற்கவில்லை. உயர் மதிப்புகொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வதாகச் சொன்னால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டு, ஆயிரம் ரூபாய் நோட்டைவிட பெரியதல்லவா என்ற கேள்விகள் அப்போதே எழுந்தன.


இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்துவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை.


தற்போது 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தைக் குறைக்க வேண்டும் என இந்தியன் வங்கி சொல்லியிருப்பதற்கு மக்கள் படும் சிரமங்களை காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.


ஏடிஎம்இயந்திரங்கள் என்பது வங்கி ஊழியர்கள் உதவியில்லாமல் வங்கிச் சேவைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது.


ஆனால், இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளால் அந்த நோக்கம் சிதைந்துபோகிறது. ஏடிஎம்-களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுக்கும் மக்கள், சில்லறை மாற்றுவதற்காக மீண்டும் வங்கிகளுக்கே வர வேண்டிய நிலைதான் இருக்கிறது.


அதேபோல், ஏடிஎம் இயந்திரங்களில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கான பகுதிகளை நீக்கிவிட்டு, 200 ரூபாய் நோட்டுகளுக்காக இடம் ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். இந்தக் காரணங்களே அந்த சுற்றறிக்கையில் உள்ளன'' என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்