14ஐ கருப்பு இரவாக்கிய காவல்துறை.. முக ஸ்டாலின் கண்ட னம்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட ஒன்று என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.


அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு ஏற்பட்டது.


இதைத் தொடர்ந்து போலீஸார் முஸ்லீம் அமைப்பினர் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் தடியடியை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர் தனது அறிக்கையில் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி காட்டுமிராண்டித்தனம்..


சீமான் கண்டனம் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பிப்ரவரி 14-ஆம் தேதி இரவை கருப்பு இரவாக்கிய போலீஸாருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


அமைதியான போராட்டத்தை வன்முறை போராட்டமாக சித்தரிக்க காவல்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. அமைதி வழியில் போராடிய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது.


கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். ஜனநாயகப் போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தை அரசு கடைபிடிக்க வேண்டும் என தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராத்திரியில்..


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்