பாஜக தேர்தல் சின்னம் வரைக: 12ம் வகுப்புக் கேள்வித்தாள் குறித்து காங்கிரஸ் வேதனை

மணிப்பூர் மாநில பள்ளிக்கல்வி 12ம் வகுப்புத் தேர்வின் அரசியல் விஞ்ஞானம் என்ற பாடத்தில் பாஜகவின் தேர்தல் சின்னம் வரைக, பண்டித ஜவஹர்லால் நேருவை விமர்சித்து 4 கருத்துகள் கூறுக என்று கேள்வித்தாளில் இருந்தது குறித்து மாநில காங்கிரஸ் கட்சி வேதனை தெரிவித்துள்ளது.


போர்ட் தேர்வின் கேள்வித்தாளை தயாரிப்பதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை என்று மாநில பாஜக மறுத்துள்ளது.


கேள்வி ஒன்றுக்கு 4 மதிப்பெண்கள் கொண்ட பிரிவில் ’பாஜக தேர்தல் சின்னம் வரைக’ என்றும் , ‘தேசக்கட்டுமானத்தில் முதல் பிரதமர் நேருவின் 4 எதிர்மறை அணுகுமுறைகளைக் குறிப்பிடுக’ என்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.


இந்தக் கேள்விகள் குறித்து கடும் கண்டனங்களை வெளியிட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜாய்கிஷன் “மாணவர்கள் மத்தியில் ஒரு சார்பான அரசியல் மனோபாவத்தை உருவாக்க இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன” என்று கண்டனம் தெரிவித்தார்.


இருப்பினும் பாஜக செய்தித் தொடர்பாளர் சொங்கதம் பிஜாய், பிடிஐயிடம் கூறும்போது, “கேள்விகள் தேர்வில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. யார் கேள்வித்தாள் வடிவமைத்தார்களோ அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.


மாநில உயர்கல்வித்துறை கவுன்சில் தலைவர் எல்.மகேந்தர சிங் கூறும்போது, இந்தியாவில் கட்சி அமைப்பு என்ற பாடத்தில் கேள்விகள் கேட்கப்பட்ட போது இந்தக் கேள்விகளை வடிவமைத்தது தேர்வுக்கட்டுப்பாட்டுத் துறையினர்தான்” என்றார்.


மாநில பாஜக தலைவர் என்.நிம்பஸ் கூறும்போது, நேரு பற்றிய கேள்வியில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, தேசக்கட்டுமானத்தில் இந்தியாவின் முதல் பிரதமருக்கு முக்கியப் பங்கு இருப்பதால் நேர்மறையானவையும் இருக்கும் எதிர்மறையானவையும் இருக்கும், என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்