10 வது முறையாக தமிழகத்தின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ் ..!!


  • பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது வீட்டில் இருந்து கிளம்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சேப்பாக்கம் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுநீள பட்ஜெட் இதுவாகும். இதனால், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.3,97,495 கோடியாக இருக்கிறது.

  • அதேபோல், வேலைவாய்ப்பின்மை அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது. வேலைவாய்ப்பின்மையின் தேசிய சராசரி 6.1 சதவிகிதமாக இருக்கும் நிலையில், அது தமிழகத்தில் 7.6ஆக இருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • • 7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

  • 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • கால்நடைத்துறைக்கு ரூ. 199 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வேளான் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  • விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீடு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. .

  • சிறப்பு போக்ஸோ நீதிமன்றங்கள் உட்பட நீதிமன்ற கட்டங்களுக்காக ரூ. 1,317 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • விவசாயிகளின் சந்தேகங்களை தீர்க்க உழவர்- அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

  • உழவர் பாதுகாப்பு திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அதேபோன்று நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டானில், மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

  • 2018-19 -ம் நிதியாண்டில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8.17 சதவிகிதமாக இருந்தது.

  • 2019-20 -ம் நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 7.27 சதவிகிதமாக இருந்தது.

  • இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட, கடந்த ஆண்டு மாநிலத்தில் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் அதிகமாக இருந்தது. வரும் நிதியாண்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட் உரையில் தெரிவித்தார் நிதியமைச்சர் பன்னீர் செலவம்!

  • வருவாய் - செலவு விவரம்!

  • தமிழகத்தின் மொத்த வருவாய்: 2,19,375 கோடி ரூபாய் • மொத்த செலவு: 2,41,601 கோடி ரூபாய் .

  • வருவாய் பற்றாக்குறை - 22,225 கோடி

  • அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • • சேலம் மாவட்டம் புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக 'சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகிறது.

  • இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையக்கப்படுத்த மற்றும் பணிகள் மேற்கொள்ள ரூ 700 கோடியும், பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்க ரூ 5,439 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அமைக்கப்படும்!

  • .2020-21 - ம் நிதியாண்டில் முத்திரை தாள் வரியானது 1 சதவிகிதத்தில் இருந்து 0.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.5,000 மிகாமல் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 667 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அதே போன்று இளைஞர் நலனுக்காக ரூ. 218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • • மதிய உணவு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ 5,935 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • ஆதி திராவிடர் முன்னேற்றத்துக்காக ரூ. 4,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அதேபோன்று, ஆதி திராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ. 2,018 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ. 1,064 கோடி நிதி ஒதுக்கீடி செய்யப்பட்டுள்ளது.

  • • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு

  • தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை நிறுவதற்கு ரூ. 1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • • மாநில சுகாதாரத்துறைக்கு ரூ. 15,863 கோடி ரூபாயும் தொழில்துறைக்கு ரூ.2,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கார்டுகள் வைத்திருப்பவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருள்களை பெற்றுக்கிள்ளும் திட்டம் தொடங்கும்!

  • 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

  • நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

  • பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.71 கோடி ஒதுக்கீடு

  • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ 15,850 கோடி ஒதுக்கீடு. சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ.12,301 கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ 5,500 கோடி

  • பசுமை வீடு திட்டம் : கட்டுமான செலவு ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது!

  • முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்கு கட்டுமான செலவு ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்படும். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். உள்ளாட்சிகளுக்கு ரூ. 6,754 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • வேளாண்துறைக்கு ரூபாய் 11,894 கோடி நிதி ஒதுக்கீடு!

  • . போக்குவரத்து மானியங்களுக்கு ரூ. 110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும். கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் பாசன திட்டங்களுக்கு 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • 1,364 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ 11,000 கோடி வழங்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக வேளாண்துறைக்கு 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ. 74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ 4,315 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

  • சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் உருவாக்கப்படும். சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு 1,403 கோடி ரூபாய்ம் ஒதுக்கீடு.

  • • நிதி நிர்வாகத்துக்கு ரூ. 1,403 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்க தமிழக பட்ஜெட்டில் ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

  • • பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 1,360 கோடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று, சென்னையில் வெள்ளபாதிப்பை குறைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழக காவல்துறைக்கு ரூ. 8876 கோடியும் தீயணைப்பு துறைக்கு ரூ 405 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழக பட்ஜெட்டில் உணவு மானியத்துக்கு ரூ. 6,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருத்திய நெல் சாகுபடி திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

  • 2020-21 -ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 4,56,660 கோடியாக இருக்கும்.

  •  


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்