மாநில மது விலக்கு அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுக்குமா..

வேலூர் மாவட்டம் அக்ராவரம் ஊராட்சி ஏரிப்பட்டரை குக்கிராமம் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் மூலம் மாற்றுத் திறனாளி முருகன் கடந்த எட்டு ஆண்டுகளில் பல கோடிகளை குவித்துள்ளான். தினசரி ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்தியவன் இன்று கள்ளச்சாராயத்தால் தினமும் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறா னாம். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தக் கூடிய கலால் வாரம் வாரம் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் போகிறதாம்.


வேலூர் மாவட்ட கலால்துறை எனது கட்டுப் பாட்டில் என முருகன் கொக்கரித்து வருவதாக வும் தகவல். இந்த எட்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட காவல்துறையின் நடவடிக்கை உட்பட்டதேயில்லையாம் முருகன். இவனது குடும்பம் மொத்தமுமே, அதாவது... தாயார் அகிலாண்டம்,  அண்ணன்கள் குருசாமி மற்றும் வெங்கடேசன், அண்ணன் மகன்கள் மணி, ராஜி, சம்பத் மகன் சக்திவேல், சின்னராஜி மகன் வெங்கடேசன் என மொத்தக் குடும்பமும் இதில் இறங்கியுள்ளதாம்.


பூங்குளம் மெயின் ரோடு அருகேதான் சாராயம் காய்ச்சப்படுகிறது. இதில் முருகனின் ஒரே அடுப்பில் பத்து ஊறல்கள், ஒவ்வொரு ஊறலிலும் பத்து பர்த்திகள் என தினமும் நூறு பர்த்திகள் என ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் கல்லா கட்டுகிறார்களாம்.


குடியாத்தம் நேதாஜி சவுக் வெல்லமண்டியிலிருந்து ஆட்டோ வேல்முருகன் மூலம் வெல்லம் சப்ளை செய்யப்படுகிறது. காய்ச்சிய சாராயத்தை கார்த்தி மனைவி ராணி, பரமசிவம், முனுசாமி ஆகியோர் மூலம் ஏரிப்பட்டரை, பூங்குளம், கன்னிகாபுரம், லிங்குன்றம், சேங்குன்றம் ஆகிய ஊர்களில் விற்கப்படுகிறதாம்.


இந்தக் கள்ளச்சாராயத்திற்கான மாமூல் பணம் பிரகாசம் என்பவன் மூலம் வாரம் வாரம் ஒரு லட்சம் என பட்டுவாடா நடக்கிறது.


முனிரத்தினம் மகன் பிரகாசம், பால்காரர் தசரதன் ஆகியோர் மூலம் மாமூல் பணம் பெற்று வருவதாக குடியாத்தம் கலால் துறை மீது குடியாத்தம் கலால் துறை மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாற்றுத் திறனாளி முருகன் ரொக்கப் பணமாக 50 கோடியும், 300 சவரன் நகைகளும், நிலங்களாக 100 ஏக்கர் அளவிலும் தான் சம்பாதித்த பணத்தில் பலரிடம் அடமானம் மூலம் பெற்றுள்ளதாகவும், மேலும் பல கோடி ரூபாயை வட்டிக்குப் பணம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


நூற்றுக்கும் மேற்பட்ட காலி மனைகளை வாங்கிக் குவித்திருப்பது மட்டுமல்லாமல், எட்டு ஆட்டோ , மூன்று டாடா ஏஸ் எனப் படும் குட்டியானை வாகனங்கள் என ஏக போகமாக வாழ்ந்து வருகிறாராம் முருகன். இவரின் தடபுடலான வாழ்க்கைக்காக தினமும் அப்பாவி ஏழை மக்கள் தங்கள் வாழ்க் கையை இழந்து வருகின்றனர்.


இதனை காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. காவல்துறை நடவடிக்கை என்ற பெயரில் கண்துடைப்பு கணக்கை காட்டுவதற்காக, சாராயம் குடிக்க வரும் ஏதாவது ஒரு ஏமாந்த நபரை முருகனே போலீஸிடம் காட்டிக் கொடுப்பதும், கலால்துறைக்கு ஐந்தாயிரமும், ஏமாந்த நபரின் குடும்பச் செலவுக்கு ஐந்தாயிரமும் கொடுத்து சரிக்கட்டி விடுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறதாம்.


அக்ராவரம் ஏரிப்பட்டரை, ரங்கசமுத்தி ரம் மீஜர், ஜங்காலபல்லி, உப்பரபல்லி என இந்தப் பகுதிகளில் வைப்பாட்டிகள் சாம்ராஜ் யம் அமோகமாக நடக்கிறது.


இதில் உப்பரபல் லியில் தனது வைப்பாட்டிக்கு சொந்தமாக ஏ.சி. வசதியுடன் வீடு, மூன்று சக்கர வண்டி யிலிருந்து நேரடியாக படுக்கை அறையில் உள்ள கட்டில் அருகில் சென்று வர கட்ட மைப்பு வசதி என ஒரு சமஸ்தான குட்டி ராஜாவாக வலம் வருகிறாராம் மாற்றுத் திறனாளி முருகன்.


எனவே வேலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு கொண்டு இந்தக் கள்ளச் சாராயத் தொழிலுக்கு நிரந்தர மூடுவிழா நடத்தினால் மட்டுமே அப்பாவிகளும், ஏழை பொதுமக்க ளும் நிம்மதியடைவார்கள்.


மங்கை தீட்டு என்றால் கங்கையில் மூழ்கலாம். கங்கையே தீட்டு என்றால் எங்கே மூழ்கி பாவத்தைத் தொலைப்பது?


கறை படிந்துள்ள கலால்துறை இந்தக் கள்ளச்சாராய பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே களங்கம் நீங்கி நற்பெயரை சம்பாதிக்க முடியும் அல்லது ஒரு தனிமனிதனின் சுகபோக வாழ்க்கைக்காக கலால் துறை அடிபணிந்து போகிறது என்பதாகத்தான் அர்த்தமாகும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு