பகலில் வங்கி கேஷியர்... இரவில் பாலியல் சைக்கோ... பொள்ளாச்சியை மிஞ்சும் தஞ்சை பயங்கரம்

வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி அவர்களை பாலியல் ரீதியில் வங்கி காசாளர் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.


இந்தகுற்றங்களுக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாகியுள்ளனர்.


2019-ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பயங்கரம் ஊடகங்கள் மூலம் அம்பலமானது. இளம்பெண்கள், கல்லுாரி மாணவியரை காதலிப்பதுபோல் நடித்து தங்கள் பாலியல் இச்சைக்குப் பலியாக்கியதோடு அதை வீடியோக்களாக எடுத்த திருநாவுக்கரசு உள்ளிட்ட இளைஞர்கள் 5 பேர் இந்த வழக்கில் கைதாகினர்.


தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், அதேபோன்ற இன்னோரு பாலியல் பயங்கரம் தஞ்சையில் நடந்துள்ளது


திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர்கள் லுாயிஸ் விக்டர் - லில்லி ஹைடா; இவர்களது மகன் 36 வயதான எட்வின் ஜெயக்குமார்.


தஞ்சை வல்லம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டதாரி பெண்ணுக்கும் எட்வின் ஜெயக்குமாருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண்ணுக்கு 25 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசைகள், ரூ.6 லட்சம் செலவில் திருமணம் என கோலாகலமாக திருமணம் நடந்தது.


மறுநாளே அந்தப் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது; எட்வின் ஜெயக்குமார் முதலிரவுக்கு மறுத்துள்ளார். எட்வின் ஜெயக்குமார் தனியறையில் தங்கியிருந்தார். புதுமணப்பெண் தனியறையில் அடைக்கப்பட்டார்.


எட்வின் அறையிலிருந்து ஆபாசமான சப்தம் மட்டும் தொடர்ந்து வந்ததை, இரண்டு நாட்களாக புதுமணப்பெண் கவனித்துள்ளார்.


அவரது செல்போனை எடுத்து மனைவி பார்த்தபோது, எட்வினுடன் பணிபுரியும் பல பெண்கள் வாட்ஸ் ஆப்பில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தனர். கணவரிடம் இதுபற்றி அந்தப் பெண் கேட்டபோது தான் அப்படித்தான் இருப்பேன் என்றும் வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்றும் தனது மனைவியை எட்வின் மிரட்டியுள்ளார்


மாலை 6 மணிக்கு பணி முடிந்தாலும், நள்ளிரவு 12 மணிக்குப் பிறகே வீட்டிற்கு வருவதை எட்வின் வழக்கமாகக் கொண்டிருந்தார்.


மேலும் 15 செல்போன்களை வைத்துக் கொண்டு எந்நேரமும் அவற்றில் வாட்ஸ் ஆப்பில் யாருடனாவது பேசிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் இருந்தார்


இதற்கிடையே, வீட்டிற்கு வந்த மருமகளிடம் மேலும் 50 பவுன் நகைகள் வாங்கி வர வேண்டும் என எட்வினின் குடும்பத்தினர் புதுமணப்பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். அப்பெண்ணுக்கு சரியாக உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்; எட்வினிடம் சொல்லி அவரையும் அடிக்க வைத்துள்ளனர்


இந்த நிலையில் ஒருநாள் கணவர் தூங்கிய பின்னர், அவரது செல்போன்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துள்ளார் அந்தப் பெண். அதில் 10 பெண்களுடன் எட்வின் ஆபாசமான கோலங்களில் இருந்த வீடியோக்கள் இருந்ததைப்பார்த்து புதுமணப்பெண் அதிர்ச்சியடைந்தார். பல கனவுகளுடன் திருமணம் செய்துகொண்ட பெண், தனது ஆண் துணையின் பகீர் செய்கைகளைப் பார்த்ததும் ஆதாரங்களை தனது செல்போனுக்கு மாற்றியுள்ளார்.


வல்லம் அனைத்து காவல் நிலையத்தில், புதுமணப்பெண் கொடுத்த புகாரில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வ


வரும் பெண் வாடிக்கையாளர்கள், பக்கத்து வீட்டு எதிர்வீட்டுப் பெண்கள், பெற்ற தாய் என கண்ணில் படும் பெண்களை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசமாகப் புகைப்படங்களை எடுத்து வைத்திருந்தார் எட்வின்


வங்கி பெண் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு புத்தகங்களிலிருந்து அவர்களது விபரங்களை திரட்டி, அவர்களிடம் ஆபாசமாக பேச்சு கொடுத்துள்ளார் எட்வின்.


பாத்ரூமில் ஆடையின்றி நின்றபடி பல பெண்களுடன் வீடியோ காலில் எட்வின் பேசியதாக முதல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.


தான் விருப்பத்துக்கு இணங்கிய பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் தனிமையில் இருந்த வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. மேலும் எட்வின் தன்னுடன் பழகிய பெண்ணை மிரட்டும் ஆடியோக்களும் அவரது செல்போனில் இருந்தன. அதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன், வாட்ஸ் அப்பில் ஆபாசமாக எட்வின் ஜெயக்குமார் உரையாடியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.


இதில் இன்னோர் கொடுமை என்னவென்றால், தனது கணவரின் தவறான செயல்பாடுகள் குறித்து புதுமணப்பெண், மாமியாரிடம் சொன்னபோது, தன்மகன் அப்படித்தான் இருப்பான் என்று கூறியுள்ளார்


கணவர் எட்வின் செல்போனில் ஒரு பெண் கிடப்பது போலவும், அவர் அருகில் ஒரு கால் இருப்பது போலவும் இருந்த படம், அந்தப் பெண்ணை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது . அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எட்வினின் மனைவிக்கு ஏற்பட்டது


தனக்கு நேர்ந்த கொடூர சம்பவங்கள் அனைத்தையும் தந்தையிடமும் சகோதரர்களிடமும் கூறியுள்ளார். இதுபற்றி அறிந்த எட்வின், புத்தாநத்தம் தேவாலயத்தில் நேர்த்திக் கடன் இருப்பதாகக் கூறி மலையேறிப்பட்டி என்ற இடத்தில் உள்ள மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய 2 முறை முயன்றுள்ளார்


இதையடுத்து அந்தப் பெண், தனது வீட்டாரை தொடர்பு கொண்டு கதறி அழுதுள்ளார்; அவரது சகோதரர்கள் உடனடியாக அவரைமீட்டு தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.


டிசம்பர் 2-ம் தேதி திருமணமான அந்தப் பெண், ஜனவரி 6ம் தேதி தாய் வீட்டிற்கு திரும்பி விட்டார். மொத்தமே ஒரு மாதம் தான் கணவர் வீட்டில் அவர் வசித்துள்ளார். தொடர்ந்து வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்துள்ளார்; போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர்


எனவே தஞ்சை சரக டிஐஜி லோகநாதனிடம் அந்தப் பெண் புகாரளித்தார்; அதையடுத்து ஜாமினில் வெளிவரக் கூடிய பிரிவுகளில் எட்வின் உள்ளிட்ட 5 பேர் மீது புகார் பதிவு செய்துள்ளனர்.


தன் மீது புகார் பதிவானதை அறிந்த எட்வின் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் பெற்றுள்ளார். எட்வினின் மனைவி, தனது கணவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சமர்ப்பித்தார்


எட்வின் மீது ஜாமினில் வெளிவர முடியாத 2 வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்யும்படி வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


நீதிமன்ற உத்தரவின் பேரில், எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதை அடுத்து தலைமறைவான எட்வின் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தை விட மிக மோசமாக நடந்துள்ள தஞ்சை பாலியல் பயங்கர சம்பவத்தில் எட்வின் பதிவு செய்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றுவார்களா? அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருமா?