கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொங்கல் தொகுப்புகள்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு கழுதைகள் மூலம் பொங்கல் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. வாணியம்பாடி அடுத்த நெக்கணாமலை கிராமத்தில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்துத் தரப்படவில்லை. மலை கிராமத்திற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், அங்குள்ள 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் குமார் தலைமையில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் கழுதைகள் மூலம் நெக்கணாமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. முதல்முறையாக நெக்கணாமலை கிராம மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது