மகனுக்கு பூனை கதைசொல்லிய துரைமுருகன்

வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர். துரைமுருகன் பேசுகையில், வேலூர் மற்றும் அணைக்கட்டுத் தொகுதிகளில் எம்.எல்.ஏ-வுக்கு யார் நிற்பது என்று முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கும் ஸ்டாலினுக்கும்தான் இருக்கிறது.


ஒருவன் பூனை வளர்த்தான். அந்தப் பூனை அடிக்கடி கதவைச் சுரண்டும். அவன் எழுந்துசென்று கதவைத் திறந்து திறந்து சாத்துவான். என்னடா இது பெரிய வம்பாக இருக்கேனு, கதவில் பெரிய துளை போட்டான். அதற்குப் பக்கத்தில் சிறிய துளையையும் போட்டான். இதைப் பார்த்துவிட்டு இன்னொருவன், துளை எதற்கு' என்று கேட்டான்.


"எழுதிக்கிட்டு இருக்கும்போது எழுந்துசென்று கதவைத் திறப்பதற்கு இடைஞ்சலாக இருக்கிறது. இந்தச் சந்து வழியா பூனை வந்துகிட்டு போயிடும்” என்றான். அதுசரி, 'பக்கத்தில் இருக்கிற சிறிய துளை எதற்கு' என்று கேட்டதற்கு, அது, குட்டிப் பூனை போவதற்கு' என்று பதில் கூறினான். பெரிய பூனை போகிற சந்திலேயே குட்டிப் பூனையும் போகாதாடான்னு' கேட்டான்.


இதுதான் பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உண்டான சிந்தனை. கதிர் அமெரிக்காவில் படித்தவர். ஆங்கிலம் நுணி நாக்கில் இருக்கிறது. தளபதி என்று நாடாளுமன்றத்தில் பேச முயன்றார். அதெல்லாம் பேசக்கூடாதுன்னு' சொன்னார்கள். உடனே, முத்துவேல் கருணாநிதி தளபதி' என்று அப்பன் பேரு, பாட்டன் பேரோடு சொன்னார். அதுதான், டிரெண்டு பாலிடிக்ஸ்.


கதிர் மரத்தில் ஏறுகிறேன் என்று சொன்னான். மரத்தில் தூக்கிவிடுவதுதான் என் வேலை. தூக்கி விட்டுவிட்டேன். மரத்தின் உச்சிக்கு ஏறுவதும் அங்கேயே இருப்பதும் அவனுடைய வேலை. பத்து பதினொரு தடவை ஒரே தொகுதியில் ஜெயிக்கிறீங்களே, எப்படி சார்னு என்னிடம் கேட்கிறார்கள். தொகுதியைத் திருக்கோயிலாகப் பார்க்கிறேன்' என்று கூறினேன். அப்படி நினைத்தால்தான் மீண்டும் வெற்றி பெற முடியும்” என்றார்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)