மகாத்மா காந்தி நினைவு தினம்

மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.


தேசத்தந்தை மகாத்மா காந்திஜி சத்தியாக்கிரக அறவழிப் போராட்டம் மூலம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன், பல நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தார்


அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 தேதி டில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காந்திஜியின் பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்றும், நினைவு நாளை தியாகிகள் தினமாக போற்றுகின்றனர். இவரது தியாகத்தை போற்றி சிறப்பிக்கும் வகையில் திருச்சி புத்தூர் பகுதியில் மகாத்மா காந்திஜி அஸ்தி மண்டபத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது


திருச்சி சேவா சங்க செயலாளர் சரஸ்வதி அமிர்தா யோக மந்திரம் யோகக்கலை பயிற்றுனர் விஜயகுமார், ஒயிட் ரோஸ் தொண்டு நிறுவன சங்கர் ,பள்ளி மாணவ-மாணவியர் உட்பட பலர் மலர்தூவி மரியாதை செய்தார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)