அவர்கள் சொல்வதும், நாம் கேட்க வேண்டியதும்,

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றக் குளிர்காலக் -கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கொண்டுவரப்பட்டு, இந்திய தேசத்தையே உலுக்கக்கூடிய 'குடியுரிமை திருத்த மசோதா 2019', பாஜக கூட்டணியின் மிருக பலத் தோடும், சில எதிர்க்கட்சி உறுப்பினர் களின் ஆதர வோடும் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது; குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் உடனடியாகப் பெறப்பட்டு, 'குடி யுரிமை திருத்தச் சட்டம்' (Citizenship Amend ment Act) என்ற அதிகாரபூர்வமான தகுதியைப் பெற்றுள்ள இச்சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதசார்பற்ற உள்ளடக்கத்தைத் தகர்ப்பதாக உள்ளது. புதுப்புதுப் பொய்கள் இந்தச் சட்டம், இந்திய தேசத்திலுள்ள முஸ்லிம் களைத் தனிமைப்படுத்துவதற்கும், ஒடுக்குவதற்கும், அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குவதற்கும், அவர்களில் ஒரு பகுதியினரை தடுப்புக் காவல் முகாம்களுக்குக் கொண்டு செல்வதற்குமான முதல் படி என்று கூறி அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இந்தியாவின் தலைசிறந்த அறிவாளிகள், முன்னாள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற மூத்த இராணுவ அதிகாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள், சக்திகள், சிறு பான்மையினர் எனப் பரந்துபட்ட இந்திய மக்கள் பிரிவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்த லின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை; கொல்கத்தாவிலும் வேறு சில இடங்களிலும் பாஜகவின் அனைத்திந்தியத்  தலைவர் அமித் ஷா ஆற்றிய உரைகள்; 'குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யும்போது உள்துறை அமைச்சர் என்ற வகையில் அமித் ஷா கூறியவை ஆகிய எல்லாவற்றிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேட்டுக் கான (National Citizenship Register) கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு வருவதைக் கண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக அமைச்சர்களும் தலைவர்களும் ஒவ்வொருநாளும் புதுப்புதுப் பொய்களை உதிர்த்து வருவதுடன்முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தின் அவப்பேறு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடத்தப்பட விருப்பது, இந்திய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான (National Population Register-NPR) 56001:05 Cùug ITCT அன்றி 'தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான' (NRCகணக்கெடுப்பு அல்ல என்று கூறி வருகின்றனர்இந்தியாவிலுள்ள பன்னிரண்டு மாநில முதலமைச் சர்கள், தேசியக் குடிமக்கள் பதிவேட்டை (NRCஉருவாக்குவதற்கான முதல் நடவடிக்கையாக மேற் கொள்ளப்படும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக் கான (NRC) கணக்கெடுப்பு நடவடிக்கைகளைத் தங்கள் மாநிலங்களில் மேற்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்தச் சூழலில், 2020 ஏப்ரல் முதல் இந்தக் கணக்கெடுப்பு தொடங்கும் என்று தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது அவப்பேறானது. மேலும், 2003இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி' அரசாங்கம் இருந்தபோது, குடியுரிமைச் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது, அதில் இந்தியாவுக்குள் 'சட்டவிரோத மாகக் குடியேறியவர்கள்' (illegal immigrants) என்ற சொற்கள் சேர்க்கப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் குறிக்கவே இந்தச் சொல் சேர்க்கப்பட்டதாகக் கூறப் பட்டாலும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நீண்டகாலத் திட்டத்திலுள்ள உள்நோக்கத்தின்படி பார்த்தால், குறிப் பாக இப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியுள்ள முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுக்கும் 'குடியுரிமை திருத்தச் சட்டம் 2019'இன்படி பார்த்தால் , முஸ்லிம்கள் மீது குறி வைக்கவே அந்தச் சொற்கள் சேர்க்கப்பட்டன என்பதை எளிதாக ஊகிக்கலாம். அதுமட்டுமல்ல, 'தேசிய மக்கள்தொகைப் பதி --வேட்டுக்காக மக்களிடம் கேட்கப்படும் கேள்விகள் என்று இதுவரை நமக்குச் சொல்லப்படுபவை, முஸ் லிம்களை மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும், போதிய ஆவணங்களோ, தகவல்களோ இல்லாதவர் களுமான வேறு பலரையும் இந்தியக் குடிமக்கள் அல்லாதவர்களாக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது. இந்திய மக்கள்தொகைப் பதிவேடும், இந்தியக் குடிமக்கள் பதிவேடும் ஒன்றோடொன்று இணைந்தவை என்பதை பாஜகவினரும் அவரது கூட்டாளிகளும் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் 'அவர்கள்' சொல்வது என்ன, நாம் கேட்க வேண்டியது என்ன என்ற தலைப்புகளில் இந்திய ஜனநாயகத்திலும் மதச்சார்பற்ற அரசியலிலும் அக்கறையுள்ளவர்கள் கூறுவன இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன: அவர்கள் சொல்கிறார்கள்: மக்கள்தொகைக் கணக் கெடுப்பைப் ( c e n s us ) பற்றி நீங்கள் கவலைப்படுவ தில்லை என்றால், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை (NPR) ஏன் எதிர்க்கிறீர்கள்? நாம் கேட்கிறோம்: மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் (CensusAct) கீழ் அல்லாமல் குடியுரிமைச் சட்டம் 2003 (Citizenship Act 2003) இன் கீழ் ஏன் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான (NPR) கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது? அவர்கள் சொல்கிறார்கள்: வழக்கமாகவே குடி யிருந்து வருபவர்களின் கணக்கெடுப்பைத்தான் நாங்கள் செய்கிறோம். நாம் கேட்கிறோம்: அப்படியானால் ஒருவரது பெற்றோர் பிறந்த இடம், அவர்களின் பிறந்த தேதி ஆகிய விவரங்களை ஏன் கேட்கிறீர்கள்? அவர்கள் சொல்கிறார்கள்: தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு இதற்கு முன்பே நடத்தப்பட்டிருக்கிறது. நாம் கேட்கிறோம்: அப்படியானால் பெற்றோர்கள் பிறந்த ஊர் எது, அவர்களின் பிறந்த தேதி ஆகியவை என்ன என்பன உள்ளிட்ட ஆறு புதிய கேள்விகளை இப்போது சேர்த்திருப்பது ஏன்? அவர்கள் சொல்கிறார்கள்: சமூகநலத் திட்டங்களுக் காகத்தான் இப்போது தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தேவைப்படுகிறது. நாம் கேட்கிறோம்: அப்படியானால் ஆதார், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் பற்றிய ஆய்வு (BPL Survey), குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான புள்ளிவிவரங்கள், அரசு தரட்டும் இதர விவரங்கள் ஆகயால் அவர்கள் சொல்கிறார்கள்: தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான (NPR) செலவுக்கு முதல் தவணை யாக ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் கேட்கிறோம்: இந்த ரூ.8,500 கோடியையும் இனி அடுத்த தவணைகளாக வரப் போகிற தொகை களையும் வேறு சிறந்த, உடனடியான திட்டங்களுக் கும் தேவைகளுக்கும் செலவிடக்கூடாதா? அவர்கள் சொல்கிறார்கள்: தேசியக் குடிமக்கள் பதிவேடு (NCR) இப்போது வராது. நாம் கேட்கிறோம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வப்போது சொல்வதில் எதை நம்புவது? எதைத் தள்ளுவது? அவர்கள் சொல்கிறார்கள்: தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) மிக நீண்டகாலத்துக்குப் பிறகே வரும். நாம் கேட்கிறோம்: தேசிய மக்கள்தொகை பதி வேட்டில் (NPR) “சந்தேகத்துக்குரிய குடிமகன்(ள்)” என்று சிலர் பதிவு செய்யப்படுவது, தேசியக் குடி மக்கள் பதிவேட்டுக்கான (NCR) முதல் நடவடிக்கை அல்லவா? அவர்கள் சொல்கிறார்கள்: தேசியக் குடிமக்கள் பதிவேடு (NCR) “எந்தக் குடிமகனுளுக்கும் தொல்லை தராது. நாம் கேட்கிறோம்: அப்படியானால் குடியுரிமைச் சட்டம் 2003இன் படி எவரொருவரும் “சந்தேகத்துக் குராய குடிமகனா(ளாக இருக்க மாட்டாரா? அவர்கள் சொல்கிறார்கள்: தேசியக் குடிமக்கள் பதிவேடு (NCR) தேசிய அளவிலானதாக இருக்கும். நாம் கேட்கிறோம்: அப்படியானால் இதில் ஒரு சதவிகிதம் தவறு இருந்தாலும்கூட 1.3 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் அல்லவா? இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)