குடியுரிமை திருத்தச் சட்டம் சினம் கொள்ளச்செய்து நாட்டில் பிரளயத்தை உண்டாக்கி பிஜேபியை குலை நடுங்க வைத்துவிட்டது.

பணமதிப்பிழப்பு, விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு என தொடர் இன்னல்களுக்கு ஆளான மக்களை குடியுரிமை திருத்தச் சட்டம் சினம் கொள்ளச்செய்து நாட்டில் பிரளயத்தை உண்டாக்கி பிஜேபியை குலை நடுங்க வைத்துவிட்டது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில் இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களில் கடந்த டிசம்பர் 12,ந் தேதி புதன்கிழமை அன்று 20 ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த தினத்தை இந்திய அரசியல் சரித்திரத்தில் “ கருப்பு நாள்' என்று சோனியா காந்தி மிகச்சரியாக அடையாளம் இட்டார். அதன் தொடர்ச்சியாக, அஸ்ஸாம் பற்றி எரிய தொடங்கியது. அசாம் போலீஸ் சுட்டதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். போக்குவரத்து முடங்கியது. அதனை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வுகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய தனது பயணத்தையே ரத்து செய்தார் அமித்ஷா . இப்படிப்பட்ட நிலையில், நாடு பற்றி எரிந்துகொண்டிருந்த இந்த சூழ்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் டிசம்பா 13, 2019 வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. அதே நேரம், இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சொன்ன மேற்கு வங்கம், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் எச்சரித்தது. இது வடகிழக்கு மாநிலங்களில் போராட்டத்தை வலுப்பெறச்செய்தது. இந்நிலையில் தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். மூன்று பேருந்துகள் மற்றும் தீயணைப்பு வாகனம் கொளுத்தப்பட்டது. அதனால் ஆத்திரம் கொண்ட காவல்துறை போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவி விட்டதாக ஒரு பொய்யை சொல்லி மாணவர்களை டில்லி போலீஸ் அடித்து துவைத்தது. பல்கலைக்கழகத்தில் எந்தவித முன் அனுமதியும் முன்னறிவிப்பும் இல்லாமல் புகுந்து மாணவர்களை ரத்த வேட்டையாடியது காவல்துறை. ஜாமியா மிலியா மாணவர்களை டில்லி போலீஸ் எதிர்கொண்ட விதம் இந்தியாவின் மனசாட்சியை பிடித்து உலுக்கியது. ஜாமியா மிலியா மாணவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்தது. இந்நிலையில், மாணவர்களை போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இந்தியா கேட்டில் இரண்டு மணி நேரம் மாபெரும் தர்ணா நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, சட்டத் திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து டிசம்பர் 16ஆம் தேதி அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலும் போராட்டங்கள் வெடித்தன. குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் என் பிணத்தின் மீதுதான் நிறைவேற்றப்பட முடியும் என மம்தா பானர்ஜி கொந்தளித்தார். அதன் பிறகு போராட்டம் தென் இந்தியாவையும் பற்றிக்கொண்டது. கர்நாடகாவில் பெங்களூர், மைசூர், பெல்லாரி எனவும், கேரளாவிலும், ஆந்திராவிலும், தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் மாணவர் போராட்டம் தொடர்ந்து நடந்து வலுப்பெற்றது. இதனின் பதற்றத்தால் இச்சட்டம் ஆட்சியை கேள்விக்குள்ளாக்கியது. அதனை திசை திருப்ப பிஜேபியினர் குடியுரிமை திருத்த சட்டத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்களினால் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், இது பிஜேபியின் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தூண்டிவிடும் சதிச்செயல் என்றும் அப்பட்டமாக பொய் சொல்லி வருகின்றனர். அப்படி என்றால், குடியுரிமை திருத்தச் சட்டம் என்னதான் சொல்கிறது?. இது, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களுக்கு கரிமை வழங்க வகை செய்யம் திட்டம். அதே நேரம், இச்சட்டம் இஸ்லாமியர்களுக்கும் பொருந்தாது. அஸ்ஸாம், மேகாலயா, மிஸோராம், திரிபுராவின், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு பொருந்தாது. அனால் பாகிஸ்கான், பங்களாகேஸ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பொருந்தும் என்பதில் சிக்கல் உள்ளது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியவாழ் இஸ்லாமியர்கள் பலர் பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளுக்கு குடி பெயர்ந்தனர். அதே சமயம் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள் , கிறித்தவர்கள் குடி பெயரவில்லை . அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். இவர்கள்தான் தற்போது மதரீதியான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்காகதான் இச்சட்டம் என்றும் அரசால் சொல்லப்படுகிறது. சரி, அப்படியென்றால், இது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்க்கு பொருந்தும். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எப்படி பொருந்தும்?. அப்போது “பிரிவினையினால் அண்டை நாட்டில் மதரீதியான தாக்குதலுக்கு ஆளானவர்கள்” என்ற கூற்றே பொய்தானே ? அண்டை நாடுகளில் மதரீதியான தாக்குதல்களுக்கு இஸ்லாமியர் தவிர ஏனையோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என அரசு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?. காரணம், மதரீ தியான தாக்குதல்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும், பங்களாதேஷில் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கான எந்தத் தகவலும் இல்லை . அதே நேரம், பங்களாதேஷில் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் கொலை செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் நாத்தீகர்களுக்கு இந்த சட்டத்தில் இடமில்லை . மேலும், மதரீதியாக ஒதுக்கப்படுபவர்களுக்குதான் இச்சட்டம் என்று அரசு சொல்லுமானால் பாகிஸ்தானில்,1953 முதல் நடந்த பல கலவரங்களில், ஆயிரகணக்கான அகமதியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். காரணம் அகமதியா என்ற பிரிவு இசுலாமியர்களை, இசுலாமியர்களாகவே பாகிஸ்தான் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால், அகமதியா இசுலாமியர்கள் பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் இன்றும் நடத்தப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கும் இச்சட்டத்தில் இடம் இல்லை . அதே போல, பக்கத்து நாடான பூட்டானில் சிறுபாண்மையராக இருக்கும் கிறித்துவர்கள் மதரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கும் இச்சட்டத்தில் இடமில்லை . அதே போல, மியான்மாரில் ரோகிங்க்யா என்ற பிரிவை சேர்ந்த இசுலாமியர்கள் மத ரீதியான தாக்கதலுக்கு ஆளானதால் சுமார் 40 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு வந்து விட்டனர். இவர்களுக்கும் இச்சட்டத்தில் இடமில்லை . ஆனால் அதே நேரம், மத ரீதியான ஒடுக்குமுறையின் அடிப்படையில் குடியுரிமை என்று கூறுகிறார் அமித்ஷா. இவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை பிஜேபி அரசு ஏற்றுக்கொள்வில்லை என்பதுதான் உண்மை . அதே போல, 1980 களில் ஒடுக்குமுறைக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் பகத்களில் காபேறி உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள். இவர்களுக்கும் இந்த சட்டத்தின் கீமம் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்பதை நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆக. இது மதரீதியாக ஒடுக்கப்படுபவர்களுக்கான சட்டமும் அல்ல , மொழிரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டமும் அல்ல, அதேபோல், இந்திய பிரி வினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டமும் அல்ல என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பிறகு எதற்கு தான் இந்த சட்டம்?. முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமே இது. அதனால்தான் நாம் முழுமூச்சோடு இதை எதிர்த்தாக வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தோடு தேசிய குடிமக்கள் பதிவேடு ( National Register of Citizens .NRC) 660TY விஷஊசியை செலுத்த அரசு காத்துக்கொண்டிருக்கிறது. இந்த என்.ஆ.சி. முதன் முதலில் அஸ்ஸாமில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. காரணம்,1890களில், தேயிலை பயிர்த்தொழிலுக்காக, பிரிட்டிஷார், வங்காளி இசுலாமியர்களை அஸ்ஸாமில் குடியேற்றினர். இதனால் ஆரம்ப காலகட்டத்தில் பிரச்சினை இல்லை. இருப்பினும் காலம் கடக்க கடக்க வங்காளத்திலிருந்து அஸ்ஸாமில் குடியேறிய இந்து மற்றும் வங்காளி இஸ்லாமியர்களால் பூர்வீகமாக அஸ்ஸாமிர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.. அதன் காரணமாக 1905ல் வங்காள பிரிவினையை உருவாக்கினர் பிரிட்டிஷார். அப்போது, அஸ்ஸாம், தற்போது பங்களாதேஷாக உள்ள கிழக்கு வங்காளத்தோடு இணைந்து இருந்தது. இதனால் 1970, 1980 ல், பெரும் போராட்டம் நடந்துள்ளது. அதன் காரணமாக அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் 15 ஆகஸ்ட் 1985ல் அப்போதைய பிரதமர் ராஜவ காந்தியோடு, அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறிய, பங்களாதேஷிகளை வெளியேற்ற வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒப்பந்தப்படி றெ ஒப்பந்தப்படி ஏற்கனவே 1951ல் இறுதி செய்யப்பட்ட, தேசிய குடிமக்கள் பதிவேட்டினை, புதுப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பங்களாதேஷில் போர் தொடங்கிய, 24 மார்ச் 1971க்கு முன்னதாக அஸ்ஸாமில் உள்ளவர்கள் இந்தியர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். அதற்கு பின்னர் உள்ளவர்கள் வெளியேற்றப்படுபவர்கள் என்பதுதான் அந்த ஒப்பந்தம். பிறகு, 1983ம் ஆண்டு ஐஎம்டிடி(Illegal Migrants Determination by Tribunal.IMDT) என்று ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, ஒருவர் இந்தியரா அல்லது வெளிநாட்டவரா என்று நிரூபிக்கும் பொறுப்பு, காவல் துறை அல்லது வருவாய்த் துறையை சேர்ந்தது. ஒருவர் வெளிநாட்டவராக இருந்தால், காவல் துறையோ, அல்லது வருவாய்த்துறையோதான் அதை நிரூபிக்க வேண்டும் என்று. இப்படிப்பட்ட நிலையில், 2005ம் ஆண்டு , IMDT சட்டப்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கில் உச்சநீதிமன்றம், ஒருவர் இந்திய குடிமகனா இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். வருவாய் துறையோ, காவல் துறையோ இல்லை என்றது. அந்த உத்தரவுதான் புதிய என்.ஆர்.சி க்கான அடித்தளமாக தற்போது அமைந்துள்ளது. அதன் பிறகு, 2013ல் அஸ்ஸாமை சேர்ந்த அஸ்ஸாம் பப்ளிக் வொர்க்ஸ் மற்றும் ஒரு என்.ஜி.ஓ, (அசாம் சன்மிலிட்டா மகாசங்கா - ஓஆர்எஸ்) அமைப்பு அஸ்சாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்க ஒன்று தொடுத்துள்ளது. அந்த வழக்கில் ஒரு வருடத்திற்குள் புதிய என்.ஆர்.சி பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த 2014, ல் உத்தரவு இட்டது. அதன்படி திருத்தப்பட்ட என்.ஆர்.சி பட்டியல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந் தேதி வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் 19 லட்சம் பொதுமக்கள் அகதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி அகதிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் தங்களை இந்நாட்டின் குடிமகனாக அங்கீகரிக்க ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களுக்கு சென்று, தான் இந்திய குடிமகன்தான் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, குடியுரிமை திருத்த சட்டம் 2019 பிரிவு 5 ன் படி எந்த ஒரு தகுதியான மனிதனும் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் மேற்படி சட்ட திருத்தத்தின் 6 ஆவது பிரிவின்படி எந்த ஒரு மனிதனும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் தொடர்ந்து வசித்திருந்தால் அவர்கள் இந்திய குடியுரிமை பெற முடியும். தொடர்ந்து இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து வந்ததற்கான வருவாய் ரசீதுகள், ஆதார் அட்டை , தொலைபேசி ரசீது, மின்சார கட்டண ரசீது போன்றவற்றை சான்றுகளாக தாக்கல் செய்து இந்தியக் குடியரிமையை பெறலாம் என்றும் அதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால், இவர்கள் இந்திய குடியுரிமையே இல்லாதபோது இந்த ஆவணங்களை மேற்படி இந்திய நிர்வாகிகளிடம் இருந்து எந்த வழிவகைகளில் பெற முடியும்?. எப்படி தீர்ப்பாயதில் சமர்ப்பிக்க முடியும்?. ஒரு வேலை நிரூபிக்கக் கலயினால் அரசு இதற்கென்று அமைத்துள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் (Detention Center) அடைத்து வைக்கப்படுவார்கள். இதுதான் என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் பின்னணி. இப்படி இந்த என்.ஆர்.சி உருவாக்குவதற்கான காரணம், அஸ்ஸாமில் அடையாளம் காணப்பட்டுள்ள 19 லட்சம் அகதிகளில் பாதிக்குமேல் இசுலாமியர்கள் என்பதுதான். இப்படி பட்ட சூழலில் இந்தியா முழுவதும் என்.ஆர்.சி அமுல்படுத்தினால் என்ன ஆகும் என்பதை யோசித்து பாருங்கள். இது இசுலாமியர்களுக்கு மட்டுமே எதிரானது என்று நாம் நினைத்தால் நாம் முட்டாளாகிவிடுவோம். அமித்ஷா சொல்ல வருவது என்ன தெரியுமா?. இதே நாட்டில் பிறந்து வளர்ந்த நாம் அனைவரும், இந்தியாவில்தான் பிறந்தோம் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீயும் சிறைக்கு செல் என்பதுதான். .அப்படி என்றால் யாரல்லாம் சிறைக்கு செல்வார்கள். சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், நிலமில்லாதோர், ஒடுக்கப்பட்டோர். - தலித்துக்கள். பிறகு யாரெல்லாம் கொலிப்பார்கள், பார்ப்பனர்கள், உயர் சாதி இந்துக்கள், நில உடமையாளர்கள் என இவர்கள் மட்டுமே குடியுரிமையை நிலை நாட்ட முடியும். இதன் அடிப்படை யில்தான் இவர்கள் அகண்ட இந்து ராஜ் ஜியம் என முழங்கி வருகிறார்கள். இதன் ஆணிவேர்தான் அஸ்ஸாம். காரணம் அங்குதான் 19 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். அதில் சரிபாதியினர் இசுலாமியர்கள். இவர்களை விரட்டுவதுதான் இவர்களின் தலையாய பணி. இப்படிப்பட்ட விபரீத குடியுரிமை மசோதாவிற்கு, ஆதரவாக ராஜ்யசபாவில் அதிமுக, பாமக, அளித்த ஓட்டுகள் காரணமாக தான் அது நிறைவேறியது என்பது உலக அறிந்த உண்மை . ஆனால், எதுவும் நடக்காதது மாதிரியும், எதுவுமே தெரியாத மாதிரியும் எடப்பாடி உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்கிறார். தமிழ் நாட்டில் போராட்டங்கள் எழுந்து விடாத வண்ணம் தேர்வுகள் நடக்க இருக்கும் பட்சத்தில் கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களுக்கு விடுமுறை என்ற பெயரில் அரசே கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களை இழுத்து மூடி அடக்குகிறது. ஆனால், அதே நேரம் 2009 காலகட்டத்தில் தமிழநாட்டில் ஈழப்பிரச்சினையை ஒட்டி திமுகவிற்கு இருந்த எதிர்ப்புகள் மாதிரி தற்போதைய அதிமுகவிற்கு இல்லை. அதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை . அத்தனை பேரும் மோடியை மட்டுமே எதிர்க்கிறார்கள். அதேநேரம் பொதுமக்கள், பிஜேபியின் கிளையான தமிழ்நாட்டு அதிமுகவை மறந்து விட்டு தங்கள் பாட்டிற்கு கடந்து செல்வது வியப்பாகவும் விந்தையாகவும் இருக்கிறது. பொதுமக்கள் இவ்வாறு கடந்து செல்வது எவ்வகையான எதிர்ப்பு என்று தெரியவில்லை .?. இருப்பினும் அதிமுகவையும், பிஜேபியையும் தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறிவது தான் தமிழ்நாட்டை இந்துத்துவா சக்திகளிடம் இருந்து காப்பாற்றும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு