நகராட்சி ஆணையர் உத்தமரா.......

பல்லாவரம் நகராட்சி குரோம்பேட்டை பகுதியில் மக்கள் செய்தி மையம் என்ற பத்திரிக்கை ஆசிரியர் அன்பழகன் என்பவர் சமூக வலைதளம் மூலம் நகராட்சி ஆணையர்களை பற்றி பல தவறுதலான செய்திகளை வெளி யிட்டுள்ளதாகவும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் திரு.மதிவாணன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தின் உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது எனவும் சில விலை போன செய்தியாளர்கள் மூலம் முகநூலில் செய்தியை பரப்பி தனக்குதானே நெகிழ்ந்து கொண்டுள்ளார் ஆணையர் மதிவாணன். ஆணையரின் திடீர் தர்ணாவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்த ஜித்தன், அடுத்த கணமே களத்தில் இறங்கி திரட்டிய தகவல் இதோ, தவறுகளை சுட்டி காட்டுவது, தவறு. செய்பவர்களை குற்றவாளியாக்க அல்ல. அத்தகைய தவறு மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதாற்காக தான். அந்த வகையில்தான் நகராட்சிகளில் நடக்கும் அவலங்களையும், நகராட்சி ஆணையரின் முறையற்ற செயல்களையும் பத்திரிகையாளர் என்ற முறையில் எழுதி வருகிறார் மூத்தபத்திரிகையாளர் அன்பழகன். அந்த வகையில் சமீபத்தில் உள்ளாட்சிகளில் நடந்த தணிக்கையில் பல்லாவரம், தாம்பரம், ஆவடி நகராட்சிகளில் சுமார் 50 கோடிக்கு மேல் ஊழல் நடந்து உள்ளதாக தகவல். அப்படி, தணிக்கையில் ஊழல் நடந்துள்ளதாக சொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ள நகராட்சிகளில்தான் மேற்படி மீடியாக்கள் போற்றும் உத்தமர் மதிவாணன் ஆணையராக பணியாற்றியுள்ளார். இத்தகைய உத்தமர் பணியாற்றிய தாம்பரம் மற்றும் ஆவடி நகராட்சிகளில் மட்டும் சுமார் 100 கோடிக்கும் மேல் இழப்பாம். இது தொடர்பான தகவல்களை சேகரித்த மக்கள் செய்தி மையம், அதனை செய்தியாக வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி அதில் கிடைக்கப்பெற்ற சில ஆதரங்களை அடிப்படையாக கொண்டு ஊழல் தடுப்பு பிரிவில் மக்கள் செய்தி மையம், ஆணையர் மதிவாணன் மீது புகார் கொடுத்துள்ளது. புகார்களை பெற்ற ஊழல் தடுப்பு பிரிவு ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளது. தற்போது விசாரணையை முடித்து ஊழல் தடுப்பு பிரிவு பல்லாவரம் நகராட்சி ஆணையரான மதிவாணன் மீது FIR பதிய இருப்பதாக தகவல். இந்த பயத்தின் காரணமாகதான் அய்யோ குத்துதே கொடையுதே என புலம்புகிறார் மதிவாணன். மேலும். இதிலிருந்து எப்படியாவது தன்னை ஆகச்சிறந்தவன் என ஊழல் தடுப்புதுறைக்கும் பொது மக்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காவே மேற்படி ஒரு ட்ராமாவை அறங்கேற்றி ஒட்டு மொத்த பணியாளர்களையும் அசிங்கப்பட வைத்துள்ளார் பல்லாவரம் நகராட்சி ஆணையரான “ஆகச்சிறந்தவர்" மதிவாணன். இந்த ட்ராமாவை அறங்கேற்ற மதிவாணன் செலவழித்த தொகை மட்டும் சுமார் 70ஆயிரத்திற்கு மேல் இருக்குமாம். சும்மா ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்வாரா?. அதே நேரம் இந்த ட்ராமாவை நடத்துவதற்கும், அதனை உலகறிய செய்வதற்கும் தொலைகாட்சி செய்தியாளர் ஒருவருக்கு மட்டும் 50ஆயிரம் பொற்காசுகள் பரிசாக கொடுத்ததாக தகவல். நிலைமை இப்படி இருக்க, மதிவாணன் என்னமோ லஞ்சமே வாங்காத அதிகாரிபோல அவருக்கு உறுதுணையாக நகராட்சி பணியாளர்கள் அனைவரும் வீதியில் நின்று கொக்கறிப்பது எந்த விதத்தில் நியாயம். உண்மையிலே மதிவாணன் அப்பழுக்கற்ற ஆணையர் என்றால் தன் மீது குவிந்துள்ள குற்றசாட்டுகள் குறித்து கவலைப்படுவதும், அப்பாவி ஊழியர்களை பணி செய்யவிடாமல் பத்திரிகையாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த பணித்ததும் ஏன்?. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கோஷம் போட்ட பல்லாவரம் நகராட்சி பணியாளர்களே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்க ஆணையர் மதிவாணன் நேர்மையானவர்தான் என்று. உங்கள் நகராட்சி ஆணையர் மதிவாணன் நேர்மையற்றவர் என்பதற்கு ஒரே சாட்சி நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டமே. காரணம் மதிவாணன் நல்லவர் என்றால் இவரைப்பற்றி புகாரும் வராது. இவரும் இப்படி தெருவில் நின்று புலம்பமாட்டார். எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதை போல தானே தனக்கு ஆதரவாக காசு கொடுத்து ஒர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதன் மூலம் தனது தில்லு முள்ளுகளை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிய மதிவாணனுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் தண்ணி காட்ட உள்ளது. அதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என குட்டிக்கரணம் போட்டு பார்க்கிறார் "ஆகச்சிறந்த" ஆணையர். அது ஒருபோதும் நடக்காது என்பதே லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத் தகவல்களாக உள்ளன. எது எப்படியோ, உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு லஞ்ச ஒழிப்புதுறை ”அகச்சிறந்த“ ஆணையர் மதிவாணனை கபளீகரம் செய்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)