மத்திய அரசு திட்டவட்டம்..!

தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்காக பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு ஆவணமோ அல்லது ரேகையைப் பதிவிடும் பயோமெட்ரிக் பதிவுகளோ கேட்கப்பட மாட்டாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் அமல்படுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு மேற்கு வங்கம், கேரளா, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதையடுத்து குடிமக்கள் பதிவேட்டின் போது எந்த ஆவணமும் கேட்கப்படாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் மத்திய அரசு மீண்டும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சக அதிகாரிகள், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் நோக்கம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் விரிவான அடையாளத்தை தெரிந்து கொள்வது மட்டுமே எனக் கூறியுள்ளனர். இதற்காக பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு ஆவணமோ, கைரேகை பதிவிடும் பயோமெட்ரிக் முறைகளோ எடுக்கப்படாது எனவும் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளனர். வெறும் கேள்வி பதில்களின் அடிப்படையில் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு இருக்கும் எனவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுக்கும் பணி தங்கள் மாநிலத்தில் நடைபெறாது என்று கேரளா மற்றும் மேற்கு வங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் பயிற்சிக்கு, 3 ஆயிரத்து 941 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்