ரஜினியின் முடிவுக்கு யார் யார் ஆதரவு...யார் யார் எதிர்ப்பு...,

மன்னிப்பு கேட்கமாட்டேன் என நடிகர் ரஜினி கூறியுள்ள நிலையில் அவருக்கு யார்,யார் ஆதரவு தெரிவித்துள்ளனர், யார் யார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதை தற்போது பார்ப்போம். ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினி விரும்பினால் அவருக்காக நீதிமன்றத்தில் வாதாட தயார் என அவர் தெரிவித்துள்ளார்துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையான நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, இது ரஜினியின் ஆன்மீக அரசியலின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார். ரஜினியுடன் நடித்தவரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்புவும், ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சரியோ, தவறோ ரஜினி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். அதே வேளையில் அதிமுக, ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெரியாரை குறை சொல்பவர்கள், தீவிரமாக படித்து ஆராய்ந்த பின்னர் கருத்து சொல்ல வேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பெரியார் குறித்து பேசும்போது நடிகர் ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், பெரியார் குறித்த கருத்திற்காக ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என திக தலைவர் கி.வீரமணியும் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து இருந்தால், அவரது புகழ் பலமடங்கு உயர்ந்து இருக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ள நிலையில், சங் பரிவார் கருத்துகளுக்கு ரஜினிகாந்த் அடிப்பணிந்து செயல்படுகிறார் என்றும் விரைவில் அவர் பெரியார் வாழ்க என சொல்வார் என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அரசியலுக்கு வராத ரஜினி, அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஒட்டு மொத்தமாக ரஜினிக்கு, சுப்ரமணியன் சுவாமி, குருமூர்த்தி, குஷ்பு, ஹெச்.ராஜா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.எஸ்.அழகிரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்