பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்கியது ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில் அதற்காக காளைகளும், மாடுபிடி வீரர்களும், முழுவீச்சில் தயாராகியுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 700 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. 923 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு பத்திற்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்காக மூன்று நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. வாடிவாசலுக்கு அனுப்பப்படும் காளைகளை பரிசோதனை செய்யவும் அடிபடும் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் 40 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு காவல்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காளைகளை வாடிவாசலுக்கு அனுப்புவதற்காக, மருத்துவ பரிசோதனைகள் தொடங்கியுள்ளது. காளைகளுக்கு மது, போதைப்பொருள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்ற சோதனை உட்பட மாடுகளுக்கு காய்ச்சல் வேறு ஏதும் உடல் உபாதைகள் இருக்கிறதா என்றும் மருத்துவ சோதனை செய்யப்படுகிறது. வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்து களத்தில் விளையாடும் மாட்டிற்கும் கார், பசுமாடுடன் கன்று, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)