சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசுத் தின ஒத்திகை நிகழ்ச்சிக்காக சென்னை மெரினா காமராஜர் சாலையில் நாளை முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தின விழா வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான ஒத்திகை நாளை, 22, 23 மற்றும் 26 ஆகிய 4 நாட்கள் மெரினா காமராஜர் சாலையில் சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாறில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை மணிக்கூண்டு, அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதைக்கு முன்பாக திருப்பி விடப்பட்டும் என்றும், அண்ணா சாலையில் இருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)