மத ரீதியான சம்பவம் அல்ல: மத்திய மண்டல ஐஜி பேட்டி

திருச்சியில் 3 பேர் கும்பலால் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் விவகாரத்தில் மதரீதியான கொலை அல்ல, கொலையாளிகள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் பேட்டி அளித்தார்.


திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருசக்கர நுழைவு பகுதியில் வாகனத்திற்கு சீட்டு வழங்கும் வேலை செய்து வந்தவர், வரகனேரி பகுதியைச் சேர்ந்த விஜயரகு (40). இவர் பாரதிய ஜனதா கட்சியில் பாலக்கரை பகுதி நிர்வாகியாக இருந்து வந்தார்.


இந்தக்கொலை குறித்து பல்வேறு கருத்துகள் வைக்கப்படுகிறது. மதமோதலில் நடந்த கொலைபோல் சித்தரிக்க முயல்வதை இல்லை என மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் தெரிவித்தார்.


அரசு மருத்துவமனையில் விஜய ரகு உடலை பார்வையிட்டப்பின் மத்திய மண்டல காவல்துறை தலைவரும், மாநகர காவல் துறை பொறுப்பு ஆணையருமான அமல்ராஜ் பேட்டி:


“பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை மதரீயிலான கொலை அல்ல. கொலையில் 3 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொலைக் குற்றவாளிகள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, இரண்டுக்கும் மேற்பட்ட மதத்தினராக ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபர் என்ன மதம் என்பது தெரியவில்லை . குற்றவாளிகள் யார் என அடையாளம் கண்டுள்ளோம். குற்றவாளிகளைப்பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


குற்றவாளிகளில் ஒருவர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு போன 10-ம் தேதிதான் வெளியில் வந்துள்ளார். அவர் பிணையில் வந்து அதன் நிபந்தனைகளை அனுசரிக்கவில்லை என்பது குறித்து விசாரிப்போம். கொலை நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் அவர்கள் வருவது தெரிகிறது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்”.இவ்வாறு அமல்ராஜ் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்