கொடைக்கானல்மூட்டுவலி தைலம் என்று தடைசெய்யப்பட்ட கொடிய விஷத்தை நிறம் மாற்றி விற்றுவருவதாக அதிர்ச்சி தகவல்

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் மூட்டுவலி தைலம் என்று தடைசெய்யப்பட்ட கொடிய விஷத்தை நிறம் மாற்றி விற்றுவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் , மலைகளின் இளவரசியாக வர்ணிக்கப்படும் கொடைக்கானல் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகின்றது.இங்கு தமிழகம் மட்டுமல்லாமல்,கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருடந்தோறும் வந்து செல்கின்றனர். கொடைக்கானல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை சுற்றுலாவை சார்ந்தே பயணிக்கும் நிலையில் சுற்றுலா தளங்களில் ஹோம்மேடுசாக்லேட், நீலகிரி தைலம், முகத்திற்கு பூசும் கிரீம்கள், வண்ண வண்ண மிட்டாய்கள் மற்றும் விண்டர் கிரீன் ஆயில் போன்றவை அதிகமான கடைகளில் சுற்றுலாபயணிகளுக்கு விற்கப்படுகின்றது... இவற்றில் இந்த விண்டர் கிரீன் தைலமானது மனிதனுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு வேதி பொருளாகும்.. இதனை சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் 5 வருடத்திற்கு முன்பு தடை சான்று பெற்றுள்ளது. இதனை மீறி சுற்றுலா பயணிகளிடம் விண்டர் கிரீன் தைலம் விற்கப்படுகிறது..இவ்வகை தைலங்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய வண்ணங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகளிடம் விண்டர் கீரின் ஆயில் உடன் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டில் வலி உள்ள இடத்தில் தேய்த்தால் வலி போயிடும் என விளக்கம் கொடுத்து கடைக்காரர்கள் தடையின்றி விற்றுவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. விண்டர் கிரீன் ஆயில் என்பது மெத்தில் சாலிசிலேட் என்ற வேதிப்பொருள் மூலம் உருவாக்கப்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு டிஸ்பூன் மெத்தில் சாலிசிலேட் கிட்டத்தட்ட இருபது 300mg ஆஸ்பிரின் மாத்திரைக்கு சமமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்...விண்டர் கிரீன் ஆயில் உடலின் உள்ளே செலுத்த கூடியது அல்ல என்றாலும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான விஷமாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். விண்டர் கிரீன் ஆயில் தசை வலிக்கு மருந்தாக விற்பனை செய்யப்படுகிறது. அதிகப்படியாக வலிநிவாரணத்திற்கு இதனை பயன்படுத்துபவர்களுக்கு வேறுவித தோல் நோய்களோ, தசைகள் முழுவதுமாக செயலிழந்து உணர்ச்சிகள் மறத்துபோகும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். விண்டர் கிரீன் ஆயிலானது மெத்தில் சாலிசிலேட் என்ற ராசாயணத்தில் தயாரிக்கப்படுவதால் தவறுதலாக உட்க்கொள்ள நேர்ந்தாலும் மரணம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகின்றது. கடந்த வாரம் கூட அப்சர்வேட்டரி பகுதியை ஸ்டாலின் என்ற 28 வயது இளைஞர் விண்டர் கிரீன் ஆயிலை குடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சயனைடு எண்ணெய் என்று அழைக்கப்படும் விண்டர் கிரீன் தைலத்தை உட்கொண்டு தற்கொலையில் ஈடுபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கொடைக்கானலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடைக்கானலில் சோதனை ஏதும் நடத்தவில்லை என்ற குற்றாச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தமிழக அரசு கவனம் செலுத்தி விஷதன்மை வாய்ந்த இந்த விண்டர் கிரீன் ஆயிலை விற்பதற்கு முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்