டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்பு சொல்வது என்ன...

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே 54க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனமும் சி-வோட்டரும் இணைந்து ஜனவரி முதல் வாரத்தில் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சி 54 முதல் 64 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனவும், பாஜக மூன்று முதல் 13 தொகுதிகள் வரை கைபற்ற வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியால் அதிகபட்சம் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்