சென்னை மெரினாவில் குழந்தை கடத்திய மருமகள்...

ஆண் குழந்தை வேண்டும் என்ற மாமியாரின் கொடுமை காரணமாக 2 பெண் குழந்தைகளுக்குத் தாயான பெண், மெரீனா கடற்கரையில் இருந்து 7 மாத ஆண் குழந்தையைக் கடத்திச் சென்றது அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ரன்தீசா - ஜானி போஸ்லே தம்பதி, சென்னை மெரீனா கடற்கரையில், பலூன் வியாபாரம் செய்து அங்கேயே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த 13ம் தேதி, இவர்களிடம் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து, சினிமாவில் நடிப்பதற்கு குழந்தையை கொடுத்தால் நிறைய பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஜானி, தனது தாய் மற்றும் மனைவி ரன்தீஷாவுடன் குழந்தையையும் சேர்த்து அந்த பெண்ணுடன் அனுப்பினார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஷூட்டிங் நடப்பதாக கூறி அங்கு செல்வது போல், அந்த பெண் குழந்தையுடன் மாயமானார். போலீசார் அந்தப் பெண்ணை தேடி வந்த நிலையில் தான் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையுடன் சிக்கினார் அந்த பெண். குழந்தையைக் கடத்திய பெண் அரக்கோணத்தைச் சேர்ந்த ரேவதி; இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் 3வதாக ஆண் குழந்தை வேண்டும் என அவரது மாமியார் நெருக்கடிகளைக் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் மாமியாரின் நெருக்கடி தாங்க முடியாத ரேவதி, சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றுக் கொள்வதாக பொய் சொல்லி வி்ட்டு சைதாப்பேட்டைக்கு வந்துள்ளார். சைதாப்பேட்டையில் தங்கியபோது வயிற்றில் துணியைக் கட்டி கர்ப்பிணி போல் நடித்துள்ளார். அடிக்கடி மெரீனா கடற்கரைக்கு ரேவதி சென்றபோதுதான் ஜானி - ரன்தீஷா தம்பதியையும் அவர்களிடம் உள்ள 7 மாத ஆண் குழந்தையையும் கவனித்துள்ளார். குழந்தையைக் கடத்த தீர்மானித்த ரேவதி கடந்த 13ம் தேதி சினிமா ஷூட்டிங்கில் நடிக்க வைக்கலாம் என்று கூறி குழந்தையைக் கடத்தினார். பின்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையுடன் சிகிச்சை தேவை எனக் கூறி சேர்ந்து கொண்டார். இதற்கிடையே போலீசார் அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட்டு தகவல் அளிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். ஞாயிறன்று பரிசோதிக்க வந்த மருத்துவர், ரேவதியைப் பார்த்ததும் சந்தேகமடைந்தார். போலீசார் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் இருக்கும் பெண் போன்று உள்ளதாக அவரது சந்தேகம் வலுத்தது. உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்; போலீசார் வந்து விசாரித்தபோது முதலில் ரேவதி ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் நடந்த தீவிர விசாரணையில்தான் மாமியாரின் கொடுமை தாங்காமல் குழந்தையைக் கடத்தியதாக ஒப்புக் கொண்டார். ரேவதி மீது வழக்குப்ப திவு செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர், பெரிய அளவிலான சாதனைகளை பெண்கள் நிகழ்த்தி வரும் இந்தக் காலத்திலும் ஆண் குழந்தை தான் வேண்டும் என மாமியார் கொடுமை செய்ததால், மருமகள் ஆண் குழந்தையைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்