ரயில்களில் வழங்கப்பட்டு வந்த பாரம்பரிய உணவுகள் நீக்கப்பட்டு, வடமாநில உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்!

கேரளாவில் இயங்கும் ரயில்களில் வழங்கப்படும் கேரள பாரம்பரிய உணவுகளை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவில் இயங்கும் ரயில்களில் இதுநாள்வரை புட்டு, கடலை கறி, முட்டை குழம்பு, அப்பம், பரோட்டா ஆகியவை இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான ரயில்வே உணவகங்கள்(IRCTC) மூலம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு பதிலாக ரஜ்மா சவால், சோலே பாதுரே, பாவ் பாஜி, கிச்சடி, பொங்கல் மற்றும் குல்ச்சா என்று பெரும்பாலும் வடமாநில உணவுகளை சேர்த்துள்ளதோடு, அசைவ உணவுகளை பட்டியலில் இருந்து எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உணவுகள் மட்டுமல்லாது, திண்பண்டங்களிலும் மாற்றத்தை செய்துள்ளது இந்திய ரயில்வே உணவகம். இதுவரை வழங்கப்பட்டு வந்த பழம்பொரி(வாழைப்பழத்தைக் கொண்டு செய்வது), பஜ்ஜி, இலையடை, கொழுக்கட்டை, உன்னியப்பம், நெய்யப்பம் மற்றும் சுழியம் ஆகியவற்றுக்கு பதிலாக சமோசா, கச்சோரி, உருளைக்கிழங்கு போண்டா மற்றும் பக்கோடா ஆகியவற்றை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மாசாலா தோசை, தயிர் சாதம், சாம்பார் சாதம், உளுந்து வடை மற்றும் பருப்பு வடை ஆகியவை பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. உணவு வகைகள் மாற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், உணவுகளின் விலைப்பட்டியலிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உணவுப்பண்டங்களுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த விலையைவிட 100% அளவிற்கு உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். உளுந்து மற்றும் பருப்பு வடை 8.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, காலை உணவுக்கு, இரண்டு இட்லி வேண்டுமென்றால் அதோடு சேர்த்து இரண்டு வடைகளை கட்டாயம் வாங்க வேண்டும் என்றும், மேலும் இட்லி தேவைப்பட்டால், மேலும் 30 ரூபாய் கொடுத்து இட்லி மற்றும் வடையை வாங்கவேண்டும். மதிய உணவானது(Full meals) 35 ரூபாயிலிருந்து 70 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அவை நீக்கப்பட்டு வட மாநில உணவுகள் பட்டியலில் சேர்க்கப்பட காரணம் என்ன என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த குற்றச்சாட்டு குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. உணவுகளின் விலை உயர்விலிருந்து வடமாநில உணவுகளுக்கு விலக்கு அளிக்கபப்ட்டுள்ளது. இரண்டு உருளைக்கிழங்கு போண்டா, கச்சோரி, சமோசா ஆகியவை இதுவரை விற்கப்பட்டு வந்த விலையான 20 ரூபாயிலேயே தொடரும்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)