அக்ரடேசன் கமிட்டி அமைக்கப்பட்டால் தான் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்பது காகிதம் இயக்கத்தின் நிலைபாடு

பத்திரிகையாளர்கள்சம்பந்தப்பட்ட இரு வழக்குகள் தற்போது சென்னை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, இதன் காரணமாக பத்திரிகை துறையில் பெரிய மாற்றம் வரும்..நல்லது நடக்கும் என நினைத்த என்னைப்போன்ற வர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது முதல் வழக்கு பொன்.மாணிக்கவேல் சம்பந்தப்பட்ட வழக்கில் பத்திரிகையாளர் சம்பந்தப்பட்ட வழக்கு இதில் தான் போலிகளை கண்டறிய நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் தான் செல்கிறது என எண்ணத் தோன்றவில்லை இதையறிய சற்று பின்னோக்கி செல்ல வேண்டும் 10-15 ஆண்டுகளுக்கு முன் பிரபல நாளிதழ்கள் அல்லாத வார,இரு வார மாத பத்திரிகைகளின் பெயர்களை பயன்படுத்தி மோசடி செய்யும் போக்கு அதிகரித்தது அதற்கு,பத்திரிகைகள் கண்ட வழி பத்திரிகைகளில் பணியாற்றும் ஆசிரியர் முதல் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் பிழை திருத்துபவர்கள் பெயர்வரை இண்பிரிண்டில் வெளியிடுவது பத்திரிகை நிர்வாகங்கள் முடிவெடுத்தன இந்த நடவடிக்கைகளுக்கு பின் போலிகள் ஒழிந்தார்களா !? என்றால், அதுதான் இல்லை முன்னிலும் அதிகமானோர் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் நூற்றுக் கணக்கில் ஊடுருவி விட்டனர் அது எப்படி.. நிகழ்ந்தது.!? கடந்த 10-15 ஆண்டுகளில் புற்றுளிலிருந்து வெளிவரும் புற்றீசல்கள் போல் பத்திரிகையாளர் சங்கங்கள் பெருமளவில் உருவாகி உள்ளன இவைகள் இப்போது அரசியல் கட்சிகள் போல் பதவிகளை உருவாக்கி அப்பதவிகளை கூவிக்கூவி விற்பனை செய்து வருகின்றன பொதுவாக சங்கங்களில் தலைவர், பொதுச்செயலாளர், அதற்கு இணை துணை மற்றும் பொருளாளர் நிர்வாக குழு உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள், அதுதான் முறை விதி - அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களில் கூட அவ்வாறுதான் உள்ளன முறையாக செயல்படும் சென்னை நிருபர்கள் சங்கம்,((Madras Reporters Guild-இதில் நான் நிர்வாக குழு உறுப்பினர்)) சென்னை பிரஸ் கிளப் மற்றும் மெட்ராஸ் யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (MUJ) சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (CUJ) ஆகியவயை இத்தகைய முறையைத்தான் பின்பற்றி வருகின்றன தமிழகத்தில் பல பத்திரிகையாளர் சங்கங்கள் என்ற பெயரில் செயல்படும் சங்கங்களில் உள்ள பதவிகள் 1)தலைவர் இணை, துணை தலைவர்கள் 2)பொதுச்செயலாளர், இணை, துணை பொதுச்செயலாளர்கள் 3)மாநில மாவட்ட பொருளாளர்கள் 4)செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 5) அமைப்பு செய்லாளர்கள் 6)கொள்கை பரப்பு செயலாளர்,கொள்கை பரப்பு இணை, துணை செயலாளர்கள் 7)செய்தித்தொடர்பாளர், இணை, துணை (!) செய்தித்தொடர்பாளர்கள் 8)சட்ட ஆலோசகர், இணை, துணை (!) சட்ட ஆலோசகர் 9)மகளிர் அணி செயலாளர்கள் இப்படி நூற்றுக்கணக்கான பதவிகளை உருவாக்கி அதில் பலரை நியமித்துள்ளனர் அரசியல் கட்சிகள் போல் தமிழகத்தை 51 மாவட்டமாக பிரித்து இப்பதவிகளுக்கு ஆட்களை நியமித்துள்ளனர் இவர்கள் அரசியல் கட்சிகளை போலவே மாவட்ட மாநாடு, மண்டல மாநாடு, மாநில மாநாடு.. முப்பெரும் விழா,ஐம்பெரும் விழாக்களை நடத்துகின்றனர் இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அரசுத்துறை செயலாளர்கள், மாவாட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், திரையுலக அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் ((!) கொடுமையும் உண்டு இச்சங்கங்கள் விற்பனை செய்த பதவிகளில் உள்ளோர் பலரும் பத்திரிகையாளர்கள் அல்ல மாறாக இவர்கள் அச்சங்கங்களின் "ஸ்பான்சர்கள்" அதாவது தமிழில் கூறினால் புரவலர்கள் இவர்களை இச்சங்கங்கள் பெயரளவில் நடத்தும் பத்திரிகைகளின் இண்பிரிண்டில்.. இணை துணை ஆசிரியர், கௌரவ ஆசிரியர்,மாவட்ட நிருபர்,சிறப்பு நிருபர், வழக்கறிஞராக இருந்தால் சட்ட ஆலோசகர் என்று அச்சிடப்பட்டுக்கொள்வார்கள் இப்படித்தான் பத்திரிகை துறை சாராத பலர் பத்திரிகைதுறைக்குள் நுழைந்து ”அரசு அங்கீகார அட்டை” ,”பிரஸ் பாஸ்” ஆகியவற்றை பெற்று விடுகின்றனர், பின்னர் அது முறைகேடான வகையில் பயன் படுத்தப்படுகின்றனபொதுவாக நாளிதழ்களில் செய்தி சேகரிக்க தலைமைச்செயலகம், கிரைம், கோர்ட், அரசியல், சினிமா என "பீட்” பிரிக்கப்பட்டிருக்கும் சினிமா செய்தியாளர்களாக, அத்துறையில் அனுபவமிக்கவர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள், அந்த பீட்டுக்கு வேறு செய்தியாளர்களை நாளிதழ்கள் அனுப்பாது, அவர்கள் சினிமா பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் தனியாக வைத்து முறையாக செயல்பட்டு வருகின்றனர் இதர பீட்டுகளில் பணியாற்றுவோர் பல பீட்டுகள் மாறி மாறி பணியாற்றும் நிலை ஏற்படும் உதாரணத்திற்கு தலைமைச்செயலக செய்தியாளர், நீதிமன்ற செய்தியாளராக மாற்றப்படுவார் அல்லது கிரைம் ரிப்போர்ட்டராக மாற்றப்படுவார் அதன் காரணமாகவும், இப்பணியில் உள்ளவர்கள் துணையாசிரியர் பணிக்கு பதவி உயர்வில் செல்லும் வாய்ப்பும் உண்டு. அதனால் இவர்களுக்கென தனிச்சங்கம் வைக்க முடியாது இந்நிலையில் தான், தலைமைச்செயலக அனைத்துச் செய்தியாளர் சங்கம் என்று ஒன்று உண்டு என்பது அதிர்ச்சி தகவல் (குறிப்பு:-தலைமைச்செயலகம் என்ற பெயரை தலைமைச்செயலகத்தில் பணிபுரியும், அரசு ஊழியர்கள் தவிர எவரும் சங்களுக்களுக்கு பயன் படுத்தக் கூடாது - அப்படிப் பயன் படுத்தினால் அது கிரிமினல் குற்றமாகும், அப்படி பயன் படுத்துவோர் மீது தலைமைச்செயலாளர் காவல்துறையில் புகார் கொடுக்கவும் முடியும்) இதுமட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து அதாவது நாகலாந்து, திரிபுரா, அஸ்ஸாம், காஷ்மீர்,ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஆந்திரா,கர் நாடாக ஆகிய மாநிலங்களின் தலைமைச்செயலகங்களுக்கும் சேர்த்து தமிழகத்தில் அனைத்து தலைமைச்செயலக பத்திரிகையாளர் சங்கமும் தமிழகத்தில் உண்டு என்ற கேலி கூத்து உங்களுக்கு தெரியுமா..!? இந்த கேலி கூத்துகளை வேறு எங்கும் காணமுடியாது, எந்த பெயரைக் கொடுத்தாலும் கேள்வி கேட்காமல் சங்கங்களை பதிவு செய்து கொடுக்கும் மன்னாரன் கம்பெனி போல் இயங்கும் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் சென்னையில் தான் உள்ளது, அவரும் விரைவில் நீதிமன்ற படியேறுவார் சங்கங்களின் பதிவாளரையும் நீதிமன்றம் ஒரு பார்ட்டியாக சேர்க்க வேண்டும், அவரிடமிருந்து இதுவரை எத்தனை சங்கங்கள், என்னென்ன பெயர்களில் செயல்படுகிறது என்பதையும், அவைகள் முறையாக செயல்படுகிறதா என்ற விபரத்தையும் கேட்டுப் பெற வேண்டும் இன்றைய நிலையில் ஏழு நபர்களின் பெயரும் முகவரியும் (அவர்கள் பத்திரிகையாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ) ஏழாயிரம் ரூபாயும் இருந்தால் ஒரு பத்திரிகையாளர் சங்கத்தை பதிவு செய்துவிட முடியும் (குறிப்பு: இக்காரணங்களினால் தான் எமது காகிதம் அமைப்பு சங்கமாக செயல்படாமல் பத்திரிகை மற்றும் பொது நலனுக்காக பாடுபடவும், தவறுகளை சுட்டிக்காட்டும் பிரச்சார இயக்கமாகவே செயல்படுகிறது. எம் அமைப்பில் பதவியும் இல்லை அடையாள அட்டையும் இல்லை) சங்கங்களின் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் நீதிமன்றமோ..அரசோ,காவல்துறையோ பத்திரிகைத்துறையில் ஊடுருவியுள்ள போலிகளை கண்டறிய முடியாது நீதிமன்றத்தில் உள்ள இரண்டாவது வழக்கு அக்ரடேசன் கமிட்டி அமைக்காமல் இவ்வாண்டு அரசு அங்கீகார அட்டை வழங்கியதற்கு எதிரான வழக்கு.. இவ்வழக்கில் பொதுவாக பத்திரிகைதுறை நலனில் அக்கறை உள்ள பலரும் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக நீதிமன்ற நடவடிக்கைகள் செல்கிறதோ என என்னத் தோன்றுகிறது அக்ரடேசன் கமிட்டி அமைக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் தீருமா..!? என்ற ஐயப்பாடு உள்ளது அக்ரடேசன் கமிட்டியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆளும் கட்சி ஆதரவு பத்திரிகையில் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் நியமிக்ககூடாது,பத்திரிகைதுறையில் அரசியலை நுழைக்க கூடாது என்பது நம் கோரிக்கை சங்கங்களின் பிரதிநிதித்துவம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.சங்கங்களை எந்த அடிப்படியில் அரசு அங்கீகரித்து அவர்களுக்கு கமிட்டியில் இடமளிக்கிறது என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் இதர மாநிலங்களில் அக்ரிடேசன் கமிட்டிகள் எந்த முறையில் அமைக்கப்படுகிறது என்ற விபரங்களை பெற்று அவ்வழியில் நீதிமன்றம் அக்ரடேசன் கமிட்டி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வும், வழிகாட்டுதலும் தரும் என நம்பினோம் மாறாக தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பத்திரிகைதுறை சார்ந்த இரண்டு வழக்குகளிலும்..நாம் எதிர்பார்க்கும் நல்லவை நடக்குமா..!? என்ற சந்தேகம் எழுந்துள்ளது பத்திரிகையாளர் சங்கங்களை கட்டுக்குள் கொண்டு வராமல் பத்திரிகையாளர்களுக்குள் ஊடுருவியுள்ள போலிகளை ஒழிக்க முடியாது என காகிதம் இயக்கம் நம்புகிறது அதேபோல், அரசியல் கலப்பில்லாமல் வேறு மாநிலங்களில் உள்ளது போல் அக்ரடேசன் கமிட்டி வெளிப்படையாக அமைக்கப்பட்டால் தான் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்பது காகிதம் அமைப்பின் நிலைபாடு நாம் எதிர்பார்க்கும் இவ்விசயங்கள் முறையாக நடக்கவில்லை என்றால், காகிதம் இயக்கம் இதற்காக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் P.ராஜன் - அமைப்பாளர் காகிதம் இயக்கம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு