உல்லாச விடுதிகளாகும்! ஆதிதிராவிட விடுதிகள்!!

 பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியில் தங்கி படிப்பதில் சிரமம் ஏற்படும் ஒரு சூழல் ஒரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் அரசு தனது துறைகளின் மூலம் அப்படி வெளியூர் செல்லும் மாணாக்கர்களுக்காகவே அங்காங்கே விடுதிகளை நிறுவியுள்ளது. அதன் மூலம் மாணக்கர்கள் தங்கி படிக்க அரசு பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. அதனையெல்லம் சீரழிக்கும் விதமாக விடுதியில் பணியாற்றும் வார்டன்களின் செயல்கள் இருப்பது வேதனையாக உள்ளது. இப்படி சில வார்டன்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல விடுதி எப்படியல்லாம் சீறழிகிறது என்பதை இந்த இதழில் பார்ப்போம். திருவள்ளூர் மாவட்டத்தில் 40 ஆதிதிராவிட விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் வார்டன்களாக பணியாற்றுபவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்களோ இல்லையோ தங்களது காதலிகளுக்கு படுக்கையறை போதிக்க தவறுவதில்லையாம். ஏன் என்றால் இந்த நாற்பது விடுதிகளிலும் இரவு நேரத்தில் ஒரு வார்டன்கள் கூட மாணவர்களுடன் தங்குவதில்லை. மாறாக விடுதி சமையல்காரரிடம் மாணவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை கொடுத்து விட்டு தனது சொந்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்களாம். அதற்கு இன்னொரு காரணம் பத்து பதினைந்து ஆண்டுகளாக பல வார்டன்கள் பணியிட மாற்றம் செய்யப்படாமல் ஒரே இடத்தில் பணி செய்து வருவதுதானாம். இதில் பெண் வார்டன்களும் அடக்கம். தனக்கு வேண்டப்பட்ட பெண் வார்டன்களை ஜாலியாக காரில் ஏற்றி கொண்டு மாணவர்கள் இல்லாத நேரத்தில் விடுதிக்கு சென்று விடுதியை உல்லாச மாளிகையாக அவ்வப்போது பயன்படுத்தி கொள்வார்களாம். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் மாணவர்களுக்கு தரமான உணவுகளை வழங்குவதில்லையாம். அதே போல சிக்கன், மட்டன், முட்டை போன்ற உணவுகளையும் வழங்குவதில் வார்டன்கள் முறைகேடு செய்து வருகிறார்களாம். குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் போர்வை, சோப்பு, தேங்காய் எண்ணெய் போன்ற உப பொருட்களில் அடிக்கடி கையாடல் செய்துவிடுகிறார்களாம். இது போன்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறதாம். அது தவிர விடுதியில் உள்ள கழிப்பறைகள் சுத்தமாக பராமரிப்பதில்லையாம். அதனால் அங்கு தங்கும் மாணவர்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறதாம்இரவில் மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவையான மின் விளக்குகள் இல்லையாம். இந்நிலையில்தான் கடந்த செப்டம்பர் 23ம் தேதி அன்று திருத்தணி அருகே " காசிநாதபுரம் என்ற பகுதியில் விடுதிக்கு அனுப்ப வேண்டிய ஐம்பது மூட்டை அரிசி மூட்டைகளை ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரியில் கடத்தும் போது உணவு கடத்தல் போலீசார் அரிசி கடத்தல் கும்பலை கைது செய்தனர். அரிசி கடத்தலில் ஈடுபட்ட கூவம் குள்ள கிருபா என்பவர் திருத்தணி கல்லூரி ஆண்கள் விடுதியில் வார்டனாக வேலை செய்து வருகிறார். இவர் உள்பட மோகன்மணி, சைமன், மனோகரன் என நான்கு வார்டன்களையும் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். இதில் குள்ள கிருபாகரன் மட்டும் உணவு கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தன் வீட்டில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள எச்சில் எலும்புகளை வீசி எரிந்தவுடன் போலீஸ் கிருபாகரனை தலைமறைவு என பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த செய்தி காட்டு தீ போல் சமூக வலைதளங்களில் பரவியதும் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி நான்கு வார்டன்களையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பொதுநல சேவகர் வழக்கறிஞர் அமுதவாணன் நம்மிடம் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் நடக்கும் ஊழல்களை சரி செய்ய வேண்டும் என்றால் மாணவர்களின் வருகை பதிவு செய்ய பயோ மெட்ரிக் அட்டடென்ஸ் அட்டடென்ஸ் அவசியம். இது குறித்து நான் பல முறை ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். ஆனால் அந்த புகார் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத ஆதிதிராவிடர்கள் நல விடுதிகளை மூடிவிட்டு மாணவர்களை பெற்றோர்களிடம் அனுப்பி விடலாம். மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளை வார்டன்கள் திருடி தன் பாக்கெட்டை நிரப்பி கொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை . ஏற்கனவே ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. அந்த இடத்திற்கு இவர்களை அனுப்பி விடலாம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாறுதல் செய்யவேண்டும். ஆனால் இங்கு வேலை செய்யும் வார்டன்கள் பத்து பதினைந்து ஆண்டுகளாக பல வார்டன்கள் ஒரே இடத்தில் வேலை செய்து வருகிறார்கள் என்று வருத்தத்துடன் கூறினார். இப்படி திருவள்ளுர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நல விடுதிகளில் பணியாற்றும் சில வார்டன்களின் தான்தோன்றித்தனத்தால் மாணக்கர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன், அரசுக்கும் அவபெயரை ஏற்படுத்துகின்றன என்பதை அரசு உடனடியாக உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ருவள்ளூரில் அரிசி கடத்தி தலைமறைவாக இருக்கும் வார்டன் கிருபா என்பவர் பி.ஏ. ரவிக்கு திருத்தணி அடுத்துள்ள பலிஜாண்டிகையில் உள்ள ரேவா நட்சத்திர ஓட்டலில் மது மங்கையுடன் ஒரு சனிக்கிழமை விருந்து வைத்தாராம். விருந்தில் கலந்து கொண்ட அமைச்சரின் பி.ஏ. ரவி போதையின் உச்சத்தில் மிதந்தாராம். அது தவிர சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நான்கு வார்டன்களையும் விரைவில் அமைச்சரிடம் பேசி வேலையை பெற்று தருகிறேன் என்று உறுதியளித்துள்ளாராம். அதற்கு தீர்மானமாக பி.ஏ. ரவிக்கு வார்டன்கள் சார்பில் மூன்று லட்ச ரூபாய் சன்மானம் கொடுக்கப்பட்தாம். இதில் பேரதிர்ச்சி என்னவென்றால், கலெக்டர் வீட்டுக்கு சமையல் செய்பவர்கள் கூட ஆதி திராவிட நல விடுதியின் சமையல்காரர்கள் தானாம். அதனால் கலெக்டரிடம் பேசி சரி செய்து விடுகிறேன் என்று ஒப்புதல் அளித்திருக்கிறாராம் ரவி.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)