தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் பலவற்றில் தமிழில் அறிவிப்பு இருப்பதாகவும், இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை எனவும் புகார் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. சென்னை வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. image இந்நிலையில், சென்னை வந்து செல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கடிதம் எழுதியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு