போலி பத்திரிகையாளர்களை களை எடுக்கும் பணி துவக்கம்

போலி பத்திரிகையாளர்களின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் நேர்மையாகத் தான் அந்த சொத்தை சம்பாதித்துள்ளார்களா? என சிறப்பு குழுவை அமைத்து விசாரிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.களை எடுக்கும் தமிழகத்தில் 'பத்திரிகையாளர்' என்ற போர்வையில் உலாவி வரும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூ ரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர் ராம் என்பவர் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் நம்பக தம்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இதனையடுத்து மனுதரார் அடையாள அட்டைகள் நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரரின் அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் வழக்கில் சி சம்பந்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷாவின் அடையாள அ அட்டையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும் காதர் பாஷாக்கும் என்ன தொடர்பு என்றும் காதர் - பாஷாவின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது என கேள்வி எழுப்பினர். மேலும், பத்திரிக்கையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன் படுத்தி கொள் வதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மஞ்ச பத்திரிக்கை நடத்துபவர்களும் தங்களை பத்திரிக்கையாளர் என கூறி கொள்வது வருத்தத்துகுறியது என தெரிவித்தனர். பத்திரிக்கைகளை பதிவு செய்ய குறைந்த பட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் பத்திரிக்கை துறையில் உள்ள கருப்பு ஆடுகளை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தற்போது பத்திரிக்கைகளில் செய்தி என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்வதாகவும், பத்திரிக்கை சங்கங்களை போலி நிருபர்கள் நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுபோன்ற போலி பத்திரிக்கை யாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மை பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்ப டுவதாகவும், இதனால் அரசின் சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.. உண்மையான பத்திரிக்கை யாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகை யாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா? என காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், தகவல் தொலை தொடர்பு துறை செயலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் மன்றம், சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தை தாமாக இந்த வழக்கில் இணைத்து உத்தரவிட்டனர்.. வழக்கு தொடர்ந்த மனுதாரரிடம், காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி வந்தது என்பது குறித்தும், மனுதாரரின் பத்திரிக்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. தமிழகத்தில் எத்தனை பத்திரிக்கைகள் உள்ளது அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கிகார அட்டை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)