எதிர்ப்புகளை சாதகமாக்கும் நித்தி மீண்டும் தலைதூக்கும் பாலியல் சர்ச்சைகள்!

முன்பெல்லாம் தெரிந்தவர் யாராவது எதிரே வந்தால் அண்ணாமலையார் மண்ணுல இருந்து வர்றீங்களே ன்னு வாஞ்சையோடு வரவேற்பாங்க. இப்போ நமட்டுச் சிரிப்போட நித்யானந்தா ஊர்க்காரங்கன்னு அறிமுகப்படுத்துறாங்க' என்று வேதனையைக் கொட்டுகின்றனர் திருவண்ணாமலைவாசிகள். ‘கைலாசா' என்ற தனிநாட்டை ஸ்தாபிக்கும் கனவில் இருக்கும் நித்யானந்தாவோ, தன் ஊர்க்காரர்களின் வருத்தத்தைப் போக்கும் நிலையில் இல்லை . திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற நபர், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதன் மூலமாக நித்தியானந்தாவாகப் புகழ் பெற்றார். வாரப் பத்திரிகை ஒன்றில் எழுதிய தொடர் பெரிய வரவேற்பைப் பெற, ஆன்மிக ஆர்வம் கொண்டவர்களுக்கு அவரது பெயர் அறிமுகமானது. ஆனால், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தபிறகு தான் அவரது பெயர் நாடு முழுக்கப் பிரபலமானது. நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா இருந்தது போன்று வெளியான வீடியோ செய்திகளில் வெளியாக, அது கிராபிக்ஸ் காட்சி என்று நித்தி தரப்பு முறுக்கு காட்ட, அவரது பெயர் நாடெங்கும் பரவியது. அதன்பின்னர் அவரது ஆசிரமம் பல ஊர்களில் கிளை பரப்பத் தொடங்கியது. பிடதி ஆசிரமத்தில் பாலியல் அத்துமீறல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு நித்தியானந்தா தரப்பு பல ஆண்டுகளாகத் தடை போட்டு வந்தது. 2018ஆம் ஆண்டின் பாதியிலேயே அந்த முயற்சிகள் நீர்த்துப்போக, மீண்டும் விசாரணை தொடங்கியது. அந்த விசாரணையில் ஒருமுறை கூட நித்தியானந்தா ஆஜராகவில்லை . அப்போதே, அவர் வெளிநாட்டுக்குத் தப்ப வாய்ப்பிருப்பதாக முறையிடப்பட்டது. நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் யூகங்கள் வெளியாகின. இதனால்அவரது பாஸ்போர்ட்டை முடக்கும் வேலைகள் நடக்கத் தொடங்கின. அப்போது கூட எந்த சர்ச்சையும் எழவில்லை . கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அகமதாபாதைச் சேர்ந்த ஜனார்த்தன என்பவர் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். இதன் காரணமாகநித்தியானந்தா எங்கிருக்கிறார் என்ற ஊடகங்களில் பரவலானது. குஜராத் மாநிலம் ஹீராபூரில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் எனும் நிறுவனம் நித்தியானந்தாவின் ஆசிரமத்தைத் தங்களது வளாகத்தில் நடத்த அனுமதி அளித்தது. அங்கு படித்து வந்த தன் மகள்கள் லோபமுத்ரா, நந்திதா இருவரையும் காணவில்லை என்று ஜனார்த்தன சர்மா சார்பில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தாங்கள் பாலியல் அத்துமீறல்களுக்குத் தொடர்ச்சியாக ஆளாகி வருவதாகத் தன் மகள்கள் கூறியதாகவும், அது பற்றி கேள்வியெழுப்பிய நிலையிலேயே அவர்கள் காணாமல் போனதாகவும் அவர் புகார் அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் நித்தியின் ஆசிரமத்தில் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆட்படுவதாகப் புகார் எழுப்பினார் கனடாவைச் சேர்ந்த சாரா லேண்ட்ரே . மா நித்யா சுதேவி என்ற பெயரில் நித்தி பக்தர்களிடையே பிரபலமானவர் இவர். தன்னைச் சிவன் என்று கூறி சிறுமிகளை நித்தியானந்தா மூளைச் சலவை செய்து வருவதாகவும், தானும் சில காலம் அதற்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறியிருந்தார் சாரா. அதோடு, நித்தியானந்தா வால் பாதிக்கப்பட்ட பெண்களின் லிஸ்டை தயார் செய்து, பாலியல் வழக்கு நடைபெற்றுவரும் நீதிமன்றம் அமைந்துள்ள ராம்நகர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். இவ்வாறு பல தகவல்கள் தூசியைக்கிளப்ப, ‘கைலாசா' எனும் பெயரிலான இணைய தளம் வழியாக மீண்டும் சர்ச்சைகளுக்கு விதை போட்டார் நித்தியானந்தா. இந்தியாவில் இருந்து தான் ஈகுவ டார் வந்ததாகவும், பக்தர்கள் துணையுடன் அங்குள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி 'கைலாசா' எனும் பெயரைச் சூட்டியதாகவும், அந்த நாட்டின் கொடி, மொழிகள், அரசாங்கச் செயல்பாடுகள் என்று பல்வேறு விஷயங்கள் குறித்துத் திட்டமிட்டு முடிவெடுத்திருப்பதாகவும் ஒரு வீடியோ வெளியிட்டார். தங்கள் நாட்டுக்கு ஐநாவிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்திருப்பதாகவும் கூறினார். அவ்வளவுதான்! மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறத் தொடங்கிவிட்டார் நித்தி யானந்தா. அவர் விரும்புவதும் இதைத்தான். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்து மதத்திற்கு எதிரானவர் களின் சதி என்று ஒற்றை வார்த்தையில் அவற்றுக்கு மூடுவிழா நடத்திவிட்டார் நித்தியானந்தா. தனக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அத்தனை பேரையும், சைவத் துக்கும், தமிழுக்கும் எதிரானவர்களாகக் காட்டி அதுபற்றிய விவாதத்தைத் தொடங்கி யிருக்கிறார். இத்தனைக்கும், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற துல்லிய விவரம் ஏதும் இதுவரை தெரியவரவில்லை . அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை இந்திய அரசும் இதுவரை வெளியிடவே இல்லை . ஹைதி, மொரிஷியஸ், டிரினிடாட் டுபாகோ நாடுகளில் ஏதாவது ஒன்றில் அவர் பதுங்கி யிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகும்வரை, நித்தி இமயமலையில் இருக்கிறார் என்றே அவரது மட நிர்வாகிகள் கூறி வந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அவ்வப்போது சர்ச்சை ஏற்படும் விதமாக வீடியோக்கள் வெளியிடும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார் நித்தியானந்தா. உலக மக்கள் அனைவருக்கும் முக்தி தரும் முயற்சியொன்றைத்தான்செய்துவருவதாகவும் ஒரு வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் அனைத்துமே க்ரீன்மேட் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கப்பட்டவை. அதன் பின்னிருக்கும் சூழல் செயற்கையாக இணைக்கப்பட்டவை. அது குறித்த சந்தேகங்களும் கேள்விகளும் இப்போதுதான் எழத் தொடங்கியிருக்கின்றன. நிலைமை எப்படியெல்லாம் திசை மாறும் என்பதைப் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, கச்சிதமாக எல்லாவற்றையும் நித்தி நிகழ்த்தி வருகிறாரோ என்ற சந்தேகமும் தற்போது அதிகரித்துள்ளது. அதனை மங்கச் செய்யும் விதமாக, இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றமும் தன்னைக் கைது செய்ய முடியாது; நானே பரமசிவன்' என்று கூறி தன் வேலையைத் தொடர்ந்து வருகிறார் நித்தியானந்தா. அவரது ஆசிரமங்கள் மூடப்படுவதும், எதிர்காலத்தில் அங்குள்ள சொத்துக்கள் அரசால் கையகப்படுத்துவதும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை. குறைந்தபட்சம், நித்தியானந்தாவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை மிகச்சரியாக நடக்கும் நிலையையாவது உருவாக்க வேண்டும். ஏனென்றால், 'பரமசிவன் கொடுத்ததை அனுபவிக்கிறேன்' என்று அவர் ஏற்கனவே சொன்னது போல, தான் உருவாக்கிய உலகத்தில் அவர் எல்லாமுமாக இருந்துவிடுவார். அது நிகழாமல் தடுப்பதை உறுதி செய்ய, இனியொரு முறை வேறொருவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளா காத நிலையையாவது உருவாக்க வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், கைலாசா என்ற நாட்டை மட்டுமல்ல நித்தியானந்தா இன்னொரு பிரபஞ்சத்தையும் கூட உருவாக் கத் துடிப்பார்! 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)