அசையா சொத்து வாங்குபவர்களுக்கு அவசியமான ஆவணங்கள்
நகர பகுதியாக இருந்தாலும், கிராம பகுதியாக இருந்தாலும் வீடு, மனை, நிலம், தோட்டம் போன்ற அசையா சொத்துகள் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இக்கால கட்டத்தில் கவனமாக செயல்பட வேண்டியதாக உள்ளது. குறிப்பாக, பெருநகர பகுதிகளில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், குறிப்பிட்ட வீடு, மனை, நிலம் பற்றி அருகில் உள்ளவர்களிடம் விசாரித்து அறிந்து கொள்வது கடினமாக விஷயமாகும். அது போன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர் பற்றியும், சொத்தில் ஏதாவது வில்லங்க விவகாரங்கள் இருக்கிறதா என்பதையும் சொத்து வாங்குபவர் தனது நிலையிலிருந்து உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். அதற்கேற்ப கவனிக்க வேண்டிய சொத்து குறித்த அரசு ஆவணங்கள் பற்றி ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். அடிப்படை ஆவணங்கள் : சொத்து உரிமையாளருக்கு அது கிடைத்த வழியை அறிந்து கொள்ள உதவும் விற்பனை ஆவணம் (Sale Deed), செட்டில்மெண்டு ஆவணம் (Settlement Deed), கொடை ஆவணம் (Gift deed), பாகப்பிரிவினை ஆவணம் (Partition Deed), உயில் (Will) ஆகியவை உள்ளிட்ட ஆவணங்கள் அடிப்படையானவை மேலும், தாய் பத்திரம் (Mother Document) , மூல ஆவணங்கள் (Parent Document) , அதிகார பத்திரம் (Power of Attorney) ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்ப்பதும் அவசியம். வருவாய்த்துறை சான்றுகள்: குறிப்பிட்ட சொத்து சம்பந்தமான பட்டா, சிட்டா, 'அ' பதிவேடு, புல அளவு வரைபடம் (Field Measurement Book FMB) மற்றும் சொத்து அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலரின் சான்று (VAO Certificate) ஆகியவற்றையும் பெற்றுக்கொள்வது முக்கியம். சொத்து உரிமையாளர் பற்றிய தகவல்கள்: அசையா சொத்தை விற்பவரது ரேஷன் கார்டு, வாரிசாக இருந்தால் வாரிசு சான்றிதழ் (Legal heir Certificate) , அதிகார பத்திரம் சம்பந்தப்பட்ட சொத்தாக இருப்பின் அதிகாரம் அளித்தவரின் வாழ்நிலை சான்றிதழ் (Life Certificate of the Principal in GPA) மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் அட்டைகள். நில அளவைத்துறை ஆவணங்கள் : சம்பந்தப்பட்ட அசையா சொத்து மீதான நில அளவைத்துறை (Survey and Land Records) ஆவணங்களும் அவசியமானவை. 1908ம் வருட 'அ' பதிவேடு சான்று, நிரந்தர நில உடைமை பதிவேடு (Permanent Land Records | Records PLR) மற்றும் நகா நில PLR) மற்றும் நகர நில அள அளவை பதிவேடு (Town Survey Land Records T S LR ) ஆகியவற்றை பெற்று கவனித்துக்கொள்வதும் சிறப்பு. உள்ளாட்சி அமைப்புகளின் சான்றுகள்: சொத்து அமைந்துள்ள நகராட்சி அல்லது ஊராட்சி ஆகிய அமைப்புகளின் வீட்டுவரி, மனை வரி ரசீது, சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது (Property Tax Receipt) , குடிநீர் இணைப்பு ரசீது (Water tax Receipt) மற்றும் கழிவு நீரகற்று வாரிய ரசீது ஆகியவையும் அவசியமான சான்றுகளாகும். சொத்து மீதான மின் பயனீட்டு கட்டண அட்டை (EB Card), மின் பயனீட்டாளர் ரசீது (Es receipt) ஆகியவையும் கணக்கில் கொள்ளத்தக்கவை. சி.எம்.டி.ஏ அல்ல து டி.டி.சி.பி அனுமதி: உள்ளாட்சி அமைப்புகளால் அளிக்கப்பட்ட மனை அல்லது மனைப்பிரிவு ஒப்புதல் (Plan Permit), சி.எம்.டி.ஏ அல்ல து டி.டி.சி.பி அளித்த கட்டுமான அனுமதி ஆணை, அனுமதி அளிக்கப்பட்ட திட்ட வரைபடம் (Approved Plan Sketch) , குடியிருப்புக்கான பணி நிறைவு சான்றிதழ் (Completion Certificate) ஆகியவற்றையும் பெற்று கவனத்துக கொள்வது நல்லது.