அதிமுக- திமுக வாக்குவாதம் .. தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமாகியுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம் கமுதி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை அறை திறக்கப்படாமல் உள்ளது. கமுதியில் வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகள் இன்னமும் திறக்கப்படவில்லை. புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் தொடங்கப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும் இதுவரை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. இங்கும் அதிகாரிகளுக்கான அறை ஒதுக்கீட்டில் குளறுபடியால் தாமதம் ஏற்பட்டுள்ளது. பழனியில் அரசியல் ஏஜென்ட் யாரும் வராததால் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமாகியுள்ளது. நாகை மாவட்டம் கீழையூர், திருத்துறைப்பூண்டி, திருவள்ளூரிலும், திண்டுக்கல்லிலும் இன்னும் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கவில்லை. ஆர் கே பேட்டை ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக -திமுகவிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அறந்தாங்கியில் வாக்கு எண்ணும் மையத்தில் நாய் இறந்ததால் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்பட்டன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்