"இன்று சூதாட்டம்.. நாளை பாலியல் தொழிலா

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை50 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து 2016-ல் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது, காங்கிரஸ் கட்சி. ஆனால், அவர்களால் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியவில்லை. நிலைமையை சரிசெய்ய இயலாத முதல்வர் நாராயணசாமி, இங்கே சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதியளித்து புதுச்சேரியை குட்டிச்சுவராக்க நினைக்கிறார்” என்று கொதிக்கின்றனர் புதுச்சேரி மக்கள். மத்திய பா.ஜ.க அரசின் கெடுபிடிகளும், மாநில காங்கிரஸ் அரசின் நிர்வத் திறமையின்மையும் புதுச்சேரி மாநிலத்தை கடும் நிதி நெருக்கடியில் தள்ளியிருக்கின்றன. எப்படியாவது சமாளிக்க வேண்டும் என நினைத்த முதல்வர் நாராயணசாமி 'இரண்டு லட்சம் ருபாய் செலுத்தி யார் வேண்டுமானாலும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் லிட்டர் பீர் தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுக் கொள்ளலாம்" என்ற குடிசைத்தொழில் திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தார். அப்போதே அதற்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன. இப்போது கேசினோ எனப்படும் சூதாட்ட விடுதிகளையும் லாட்டரி விற்பனையையும் கொண்டு வரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் முதல்வர் நாராயணசாமி. இதுதான் மக்களின் கொதிப்புக்கான காரணம். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகங்கள் என அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கும் நிலையில், பல்வேறு அமைப்புகளும் இளைஞர்களும் அரசுக்கு எதிராக பல்வேறு வகைகளில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவரிடம், மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கிரண்பேடியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்' என மனு கொடுத்தார் முதல்வர் நாராயணசாமி. அவ்வளவுதான்... சூதாட்டக்கூடாரங்கள், மதுபானக் கடைகள், லாட்டரி விற்பனை போன்றவற்றை தொடங்குவதுதான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியா? மாணவர்களும் இளைஞர் களும் இவற்றுக்கு அடிமையாகிவிட மாட்டார்களா? எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைய காத்திருக்கும் சூதாட்ட ஓநாய்களிடமிருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும். கேசினோவுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன்” என்று கொதித்தெழுந்தார் கிரண்பேடி. "கவர்னர் கிரண்பேடி, பா.ஜ.க ஆளும் கோவாவில் கேசினோக்களை மூடச் சொல்வாரா? புதுச்சேரி, சுற்றுலா மாநிலம். சுற்றுலாவுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எது தேவையோ அதை இந்த அரசு செய்துகொடுக்கும். கேசினோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று சொல்வதற்கு இவர் யார்?” என்று பதிலடி கொடுத்தார் முதல்வர் நாராயணசாமி. இதுகுறித்துப் பேசிய அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழு உறுப்பினரான அன்பழகன், "சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரியில் கலாசாரச் சீரழிவு நடந்துவருகிறது. வார இறுதி நாள்களில் 20-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் ஆபாச நடனம் நடத்துகின்றனர். புதுச்சேரி என்றாலே குடியும் கும்மாளமுமாக இருக்கலாம் என்றுதான் வெளிமாநிலத்தில் இருக்கிறவர்கள் நினைக்கின்றனர். ஏற்கெனவே நகருக்குள் இருக்கும் சுமார் 200 வீடுகள் விடுதிகளாகிவிட்டன. அங்கு யார் வந்து செல்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. அங்கே பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் தீவிரவாதிகள் தங்கியிருந்தாலும் கண்டுபிடிக்க இயலாது. புதுச்சேரிக்கு வருபவர்கள் குடித்துவிட்டு, பாலியல் தொழில் செய்யும் பெண்களைத்தான் தேடுகின்றனர். இந்தச் சூழலில், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையானவற்றைச் செய்து தருவோம் என்கிறார் முதல்வர் நாராயணசாமி” என்றார் வேதனையுடன். புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் லோகு. அய்யப்பன், "ரேஷன் கடைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பஞ்சாலைகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கிவிட்டன. இதனால், ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து தவிக்கின்றனர். இவற்றையெல்லாம் சரிசெய்யாமல், தனிப்பட்ட ஆதாயத்துக்காக கேசினோக்களைக் கொண்டுவரத் துடிக்கின்றனர். கேசினோவுக்குள் கேபரே நடனம், பாலியல் தொழில் என அனைத்துக்கும் அனுமதி உண்டு. லட்சக்கணக்கில் பணம் செலுத்திவிட்டு அங்கே செல்கிறவர்களின் ஆசையை நிறைவேற்ற, புதிது புதிதாக முளைக்கும் புரோக்கர்கள் பணத்தைக் காட்டி விளிம்புநிலைப் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளுவார்கள். கோவாவில் இதுதான் நடக்கிறது. கலாசார நடனம் என்ற பெயரில் ஆபாச நடனத்துக்கு அனுமதி கொடுப்பது, சமூகச் சீரழிவை ஏற்படுத்தாதா? மாநில வருவாய்க்காக இன்று சூதாட்டக் கூடங்களைத் திறப்பவர்கள், நாளை பாலியல் தொழில் கூடங்களையும் நடத்துவார்களா?'' என்று கடுகடுத்தார். இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், “மாநில வருவாய் என்பதெல்லாம் இரண்டாவதுதான். கேசினோ தொழிலில் கோலோச்சும் மூன்று பெரிய கம்பெனிகள் புதுச்சேரிக்கு வருவது உறுதியாகிவிட்டது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் கைமாறியிருப்பதுடன், வரும் சட்டமன்றத் தேர்தல் செலவுகளைப் பார்த்துக்கொள்வதாகவும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதனால், கவர்னர் கிரண்பேடி தடுத்தாலும் கேசினோக்கள் வருவது உறுதி” என்று அதிர்ச்சி கொடுத்தார்கேசினோக்களுக்கு கோவாவை உதாரணம் காட்டும் முதல்வர் நாராயணசாமி, 'கோவாவில் போதைப்பழக்கம் அதிகரித்திருப்பதுடன், பெண்கள் பீர் குடிப்பது அதிர்ச்சியளிக்கிறது. சூதாடுவது நல்ல பழக்கமில்லை. அதை கோவாவிலிருந்து அகற்ற வேண்டும்' என்று மறைந்த கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர் சொன்ன வார்த்தைகளையும் நினைவில் கொள்ளவேண்டும். .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)